சாத்தானின் ஏதேன் Jeffersonville, Indiana USA 65-0829 1நாம் தலைவணங்குவோம். அன்புள்ள தேவனே, மறுபடியுமாக இன்றிரவு கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் கூடி வந்து, எங்கள் சத்துருவைப் போர்க்களத்தில் சந்திக்க எங்களுக்களித்த இந்த நல்ல தருணத்திற்காக உமக்கு நன்றியுள்ளவர்களாய் இருக்கின்றோம். தேவனுடைய வார்த்தையின் மூலம் போர்க்களத்திலுள்ள உமது சத்துருவை உமது மக்களிடையேயிருந்து துரத்திவிட்டு, இன்றிரவு அவர்கள் சுவிசேஷ ஒளியைக் காண அருள் புரியும். சத்தியத்தைக் காண்பதற்கு நாங்கள் பார்வையடைய எங்கள் கண்களுக்கு நீர் கலிக்கம் போட வேண்டுகிறேன். நாங்கள் இவ்விடம் விட்டுச் செல்லும்போது, “வழியிலே அவர் நம்முடன் பேசினபோது நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்து விட்டு எரியவில்லையா?” என்று எங்கள் இருதயங்களில் சொல்லிக் கொண்டு செல்ல கிருபை புரியும். வியாதியஸ்தர்களையும், துன்பப்படுகிறவர்களையும் நீர் சுகப்படுத்தும். நம்பிக்கையிழந்தவர்க்கு நம்பிக்கையூட்டும். தளர்ந்துபோய் கீழே தொங்கிக் கொண்டிருக்கும் கரங்களை உயர்த்துவீராக, கர்த்தராகிய இயேசுவின் வருகையை நாங்கள் எதிர்நோக்கியிருக்க அருள்புரியும். அது சமீபமாயுள்ளது என நாங்கள் விசுவாசிக்கின்றோம். இவையாவையும் இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். உட்காருங்கள். 2இன்றிரவு சுருக்கமாகப் பேச முனைகிறேன். ஏனெனில் ஆராதனைக்கு அநேகர் தேசத்தின் பல்வேறு பாகங்களிலிருந்து வந்திருக்கின்றனர். உங்களில் சிலர் இந்த மாலை ஆராதனைக்கென்று காலை ஆராதனைக்குப் பிறகு தங்கியிருக்கிறீர்கள்; நீங்கள் அதிக தூரம் திரும்பச் செல்லவேண்டும். அதற்காக உங்களுக்கு நன்றி சொல்கிறேன். இன்று காலை சகோதரன் நெவில் நிகழ்த்திய பிரசங்கத்தைக் கேட்க ஆவல் கொண்டேன். அவரளித்த செய்தியை நான் அநேகமுறை கேட்டதுண்டு. ஆனால் இன்று காலை அவரளித்த காலத்துக்கேற்ற செய்தியை நான் பாராட்டுகின்றேன். அதை கேட்க தேவனால் நான் ஏவப்பட்டேன் என்பதை உணருகிறேன். மிக அருமை! ஜனங்களாகிய நீங்களும் கூட வந்து இவர் பிரசங்கிப்பதைக் கேட்க ஏன் வருகிறீர்கள் என்று எனக்குப் புரிகிறது. இவரும் கூட எப்பொழுதுமே அருமையாக பேசுவார், இவர் பேசுவதைக் கேட்க நானும் நிச்சயமாயிருக்கிறேன். 3நான் சந்திக்க எத்தனித்தவர்களில் சிலரை இன்று காலையிலும் பகலிலும் சந்தித்தேன். ஆனால் அநேகம், அநேகம் பேர்களை இன்னமும் சந்திக்க வேண்டியதாயிருக்கிறது. எத்திரோ ஒருமுறை மோசேயிடம், “இது உமக்கு மிகவும் பாரமான காரியம்” என்றான். இங்குள்ள அநேக சகோதரர்களிடம் நியாயமான பிரச்சினைகள் உண்டு. அவையாவும் கவனிக்கப்பட வேண்டியவைகளே. நம்முடைய போதகர், அல்லது சகோதரன் மான் (Bro. Mann) மற்றும் நம் விசுவாசத்தில் நிலைத்திருக்கும் ஏனைய போதகர்கள், அவர்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அவர்களிடம் செல்லுமாறு நான் சிபாரிசு செய்கின்றேன். இவர்கள் உங்களிடம் வந்து, நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்று ஆலோசனை கூறுவார்கள். சிலருக்குப் பிள்ளைகளால் பிரச்சினைகள் உண்டாயிருக்கலாம்; அல்லது விசுவாசிகள் அல்லாதோரை விவாகம் செய்த தவறு காரணமாகப் பிரச்சினைகள் எழுந்திருக்கக் கூடும். இப்போதகர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரராதலால் அவர்கள் உங்களுக்கு உதவி செய்யக்கூடும். பிரச்சினை காணப்படுவர் அவர்களிடம் செல்லுங்கள். உங்களுக்குத் தேவையான உதவியை இவர்கள் அளிப்பார்கள் என்பது உறுதி. நான் ஒருவனே உங்கள் எல்லாரையும் சந்திப்பதென்பது இயலாதது. எங்கு சென்றாலும் பிரச்சனையுள்ளவர் காணப்படுகின்றனர். அவர்கள் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட விதத்தில் சந்திக்க எனக்கு ஆவல் உண்டு. நீங்கள் பாருங்கள் ஆனால் அது இயலாத காரியம். ஆனால், தேவன் யாவையும் சரிப்படுத்தித்தர வேண்டுமென்று நான் எப்பொழுதும் உங்களுக்காக அவரிடம் மன்றாடிக் கொண்டிருக்கிறேன். 4நான் இன்றிரவு ஆதியாகமம் 3ஆம் அதிகாரத்திலிருந்து ஒரு பாகத்தை வாசிக்க விரும்புகிறேன். அதன் பின்பு, முன்தினங்களில் நான் உங்களிடம் போதித்ததை மறுபடியும் நினைவுபடுத்துவேன். நாம் இவ்விடம் விட்டுச் செல்லுமுன்னர், ஏற்கனவே நாம் அறிந்துள்ளதைக் காட்டிலும் சற்று அதிகமானதைக் கர்த்தராகிய இயேசு நமக்கு வெளிப்படுத்தித் தருவாரா என்று பார்க்கலாம். அவர் அவ்விதம் வெளிப்படுத்த வேண்டுமென்று அவரை வேண்டிக் கொள்கிறேன். “தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்க வேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது. ஸ்திரீ சர்ப்பத்தைப் பார்த்து: நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம்; ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக் குறித்து, தேவன் நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைக் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள். அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும் நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப் போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது. அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான். அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டு பண்ணினார்கள்.“ (ஆதி. 3:1-7) 5படித்த இந்த வசனங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக! இன்றிரவு, 'சாத்தானின் ஏதேன்' என்னும் பொருளை அதினின்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். 'சாத்தானின் ஏதேன்' என்பது மனத்தால் நினைக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. சென்ற ஞாயிறு இரவு நான் பேசின 'சிந்திக்கும் மனிதனின் வடிக்கட்டும் பொருளும், பரிசுத்த மனிதனின் ருசி' (Thinking Man's Filter and Holy Man's Taste) என்னும் பொருளுக்கு இது ஒத்ததாயுள்ளது. சில நேரங்களில் இத்தகைய மனத்தால் நினைக்க முடியாத பக்குவமற்ற சொற்கள் நம் கவனத்தைச் சில முக்கியமான காரியங்களுக்கு அழைத்துச்சென்று, வார்த்தையை நாம் நன்கு ஆராய்ந்து படிக்க ஏதுவாயுள்ளன. அதைத்தான் என் சபையாரும் செய்ய வேண்டுமென்று நான் விரும்புகிறேன் “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, ஆனாலும் தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” ஆகவே, வார்த்தையை வாசியுங்கள்; அதை ஆராய்ந்து பாருங்கள். தேவனுடைய கண்களைக் கொண்டவர்களாய் நீங்கள் அதை ஆராய்ந்தால், தற்போதைய காலத்தில் நீங்கள் எவ்வாறு வாழவேண்டும் என்னும் ஞானத்தை அறிவில் சிறந்தவர்களாகிய நீங்கள் பெறுவீர்கள். 6இன்றிரவு உங்களிடம், “என்னால் இதைச் செய்ய முடியும், அதை செய்யமுடியும்” என்று கூறிவிடலாம். மக்களிடம் பேசி அவர்கள் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமென்ற ஆர்வம் என்னிடமுண்டு. அதை தேவனறிவார். உங்கள் ஒவ்வொருவரின் வீடுகளைச் சந்தித்து, காலை ஆகாரம் அருந்தி, பகல் நேரத்தில் உங்களுடன் அணில் வேட்டைக்குச் செல்ல எனக்கு ஆவல் உண்டு. பாருங்கள்? நான் அதை செய்ய விரும்புகிறேன், ஆனால் அது என்னால் இயலாது. ஆராதனைக்குப் பிறகு உங்கள் ஒவ்வொருவரின் வீடுகளுக்குச் சென்று, சற்று உட்கார்ந்து, உங்கள் நலன்களை விசாரித்து, தேவனை குறித்து அளவளாவ எனக்கு அதிக ஆவல் உண்டு. இங்கு அமர்ந்துள்ள மனிதரே, பெண்களே, அவ்வாறு நான் செய்ய வேண்டுமென விரும்புவதை தேவன் அறிவார், ஆனால் என்னால் அதைச் செய்ய முடியாது. பாருங்கள்? இதில் அதிக பிரயாசையும் சிரத்தையும் இருக்கிறது. 7ஆகவே ஆகவே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற நரம்புத் தளர்ச்சியுள்ள காலத்தில்... நானும் கூட நரம்புத் தளர்ச்சியுடைய மனிதனாவேன். இன்றைக்கு ஒரு காரியத்தை இன்று செய்ய வேண்டுமென்று நான் தீர்மானித்தால், அதை நான் எப்படியாகிலும் செய்துவிட வேண்டும். இல்லையெனில், நாளை அது என்னிடமிருந்து ஒரு மில்லியன் மைல் தொலைவில் அகன்று விடும். அதை தடை செய்ய எத்தனையோ காரியங்கள் இடையில் தோன்றுகின்றன. எனவே எப்பொழுதும் புத்தி கூர்மையாய் இருக்க முயல வேண்டிய அவசியம் உண்டாகின்றது. 8ஆனால் என்னுடைய முக்கிய குறிக்கோள் என்னவெனில், நான் இந்த பூமியில் இருக்கையில் எனக்காக பூமியில் எவ்வளவு நேரமானது விடப்பட்டிருக்கிறதோ அதில் சுவிசேஷத்தை சபையின் மூலமாக பிரசங்கித்து, இந்த நாளில் இயேசு கிறிஸ்து விற்கு கனத்தை கொண்டுவர என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்யவேண்டும் என்பதுதான். உங்களுக்கு ஒத்தாசையாயுள்ளவைகளைக் கூறவே நான் முயல்கிறேன், இன்று காலை நான் வீட்டிற்குச் சென்று, “ஆண்டவரே, மக்களுக்கு ஒத்தாசையாயிருக்க இன்றிரவு நான் என்ன சொல்லவேண்டும்?” என்று அவரிடம் கேட்டு விட்டு ஆராய்ந்தவைகளை உங்களுக்கு எடுத்துரைக்கப் போகின்றேன். இன்று காலை சகோதரன் நெவில் நமக்களித்த வல்லமையான செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்த பிறகு... “ஒரு வைத்தியர் வியாதி என்னவென்பதைக் கண்டுபிடித்து விடுவார். ஆனால் பாத்திரம் நிறைய ஊசிகளைக் கொண்டு வருபவர்தான் ஊசி போடுவார்” என்று அவர் சொன்னது மிகவும் அற்புதமாயிருந்தது. எனவே இது உண்மையில் ஒரு அழகான சொற்கள் என்று நான் நினைத்தேன். நான் அதைப் பற்றி நினைத்தேன்: வியாதி என்னவென்று கண்டுபிடிக்கப்பட்ட பின்பு ஊசியின் மூலம் மருந்து செலுத்துதல். அது மிகவும் நல்ல கருத்து. 9உங்களிடம் ஒன்றைக்குறித்து நான் பேச விரும்புகிறேன், இந்த காலத்திற்குரிய தேவனுடைய வாக்குத்தத்தை உங்களுக்கு கற்பிக்கத்தக்கதாக ஒன்றைக் கொண்டு வருதலே. பாருங்கள்? முன்பிருந்த காலங்களில் யார் எவ்விதம் இருந்தனர் என்பதைக் குறித்தல்ல, அது அக்காலங்களுக்கு உகந்ததாய் இருந்தது. அதைப்பற்றி நாம் ஏற்கனவே சிந்தித்துள்ளோம். ஆனால் உங்கள் மனதிற்கு ஒன்றைக் கொண்டு வந்து, இங்கே எழுதி வைத்துள்ள வேத வசனங்களுடன் கொண்டு வர முயல்வேன் என்றெண்ணினேன், அது உங்களுக்கு ஐயந்தெளிய வைத்து, இப்பொழுது நீங்கள் போர் புரியும் போர்க்களத்தில் உங்களைச் சிறந்த போர் வீரர்களாக ஆக்கவேண்டுமென்ற எண்ணம் கொண்டுள்ளேன். சத்துருவின் தந்திரங்களை நீங்கள் அறிந்துகொண்டால், அவன் உங்களை அணுகும் முன்பே, அவைகளைத் தடுத்து நிறுத்தி விடலாம். பாருங்கள்? குத்துச் சண்டையில் உங்களை நோக்கி வரும் குத்துகளை இயன்றவரை உங்கள்மேல் விழாமல் தடுப்பதற்குக் கற்றுக் கொள்வது முக்கியமாகும். 10நாம் வாழும் பாவம் நிறைந்த இந்நாட்களில் சற்று நேரம் இதை பார்ப்போம். தேவனுடைய பிள்ளைகள் சித்திரவதை செய்யப்பட்டு கொலையுண்ட நாட்கள் வரலாற்றில் உண்டு. ஆயினும் சத்துரு நம்மை வஞ்சிக்கும் இந்நாட்கள் போன்று இதுவரை எக்காலத்தும் இருந்ததில்லை. இவை பிசாசின் தந்திரமும் வஞ்சகமும் நிறைந்த நாட்களாம். அதை நான் காணும்போது, இந்த கருத்தை கொண்டு வருகிறது, அது என்னவெனில் எந்த ஒரு காலத்தைக் காட்டிலும் இன்றைக்கு ஒரு கிறிஸ்தவன் இன்னும் அதிகமாக மிக கவனமாக தன் காலின் பெருவிரலில் நின்று கவனித்துக் கொண்டேயிருப்பது போல இருக்க வேண்டியனாயுள்ளான். 11ரோமாபுரி சபையைத் துன்புறுத்தின காலங்களில், தவறு செய்ததாய் கருதப்பட்ட கிறிஸ்தவன், அவன் சாட்சியின் காரணமாய் அரங்கத்தில் போடப்பட்டு, சிங்கங்களுக்கு இரையானான், ஆனால் அவன் ஆத்துமா இரட்சிக்கப்பட்டிருந்தது, ஏனெனில் அவன் பரிசுத்தமும், களங்கமற்ற விசுவாசியாய் சந்தோஷமாய் தன் இரத்தத்தினால் அவன் சாட்சியை முத்திரித்தான். அவன் சரீரத்தில் துளைகள் துளைக்கப்பட்டு, இரத்தக் குழாய்களின்று இரத்தம் பீறிட்டு வந்தபோதும், அவன் உத்தம விசுவாசியாய் “கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும்” என்று கூறினான். 12ஆனால் தற்காலத்திலோ, பிசாசின் வஞ்சகமானது, மக்கள் தாங்கள் கிறிஸ்தவர்களாக இல்லாமல் இருக்கையில் அவன் தாங்கள் கிறிஸ்தவர்தான் என நம்பும்படி செய்கின்றது. நீங்கள் முத்திரை வைக்க வேண்டியதல்லாத ஒரு காரியம் இருக்கிறது. எனவே, உயிர்நீத்து சாட்சியை முத்தரிக்க வேண்டிய நிலையுண்டாயிருந்த காலத்தைக் காட்டிலும் அதிவஞ்சகமுள்ள நாட்களாக இந்நாட்கள் காணப்படுகின்றன. பிசாசு தன்னால் முடிந்தவரை தன் வஞ்சகமான கண்ணிகளை வைத்திருக்கிறான். அவன் ஒரு வஞ்சகன். நாம் வாழும் இந்நாட்கள் எவ்விதம் இருக்குமென்று இயேசு மத்தேயு 24ல் கூறியுள்ளார். இதுவரை வாழ்நாளில் கண்டிராத மிகவும் வஞ்சகமான நாட்கள், கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களும் வஞ்சிக்கப்படத் தக்கதான நாட்களாம் இவை. 13இக்காலத்திற்கென வேதத்தில் உரைக்கப்பட்டுள்ள சில வேத வசனங்கள் அல்லது தீர்க்கதரிசனங்களை நாம் வாழும் இந்நாட்களுடன் ஒப்பிட்டுப் பார்போம். 2தீமோத்தேயு 3-ம் அதிகாரத்தில் இதை நாம் அறிந்து கொள்கின்றோம். இந்நாட்களில் மனிதர் துணிகரமுள்ளவர்களாகவும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும் இருப்பார்களென தீர்க்கதரிசி உரைத்துள்ளார். அதை இந்நாட்களுடன் சற்று ஒப்பிட்டுப் பார்ப்போம். விவரிக்க வேண்டிய அளவுக்கு அதை விவரிக்கப் போதிய சமயம் இல்லாததால், அதைச் சுருக்கமாகப் பார்ப்போம், இதை நீங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தால், நீங்கள் வீடு சென்று அதை விவரமாக ஆராயத்தக்கதாக: துணிகரமுள்ளவர்கள், இறுமாப்புள்ளவர்கள், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியர், இணங்காதவர்கள், அவதூறு செய்கிறவர்கள், இச்சையடக்கமில்லாதவர்கள், நல்லோரைப் பகைக்கிறவர்கள்; கடைசி நாட்களில் அதாவது இந்நாட்களில், அவை சம்பவிக்குமென ஆவியானவர் வெளிப்படையாய்த் தீர்க்கதரிசனம் உரைக்கின்றார். 14இப்பொழுது வெளிப்படுத்தல் 3:14-லிலும் (அதாவது லவோதிக்கேயா சபையின் காலத்தில்) கடைசி நாட்களில் சபை எவ்விதம் காணப்படுமென்று அறிவிக்கப்படுகின்றது. அது ஒரு விதவையென்றும் அதற்கு ஒரு குறைவுமில்லையென்றும் அது கூறுகின்றது. அதுஐசுவரியவானும் திரவியசம்பன்னனுமாய் இருந்தாலும், உண்மையாக அதுநிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும்,நிர்வாணியு மாயுள்ளதை அறியாமலிருக்கின்றது. இப்பொழுது, அவர் இக்காலத்து சபைக்கு இவைகளைஅறிவிக்கின்றார் என்பதை நினைவில் கொள்ளவும், பரிதபிக்கப் படத்தக்கவனும், குருடனும், நிர்வாணியாயிருந்தும் அவர்கள் ஆவியினால் நன்கு நிறைக்கப்பட்டு ஆயத்தமாயிருப்பதாய்க் கருதுகின்றனர். அந்த கடைசி சொற்றொடர் அந்த கடைசி வார்த்தை இது மிகவும் வியக்க வைக்கிறது. லவோதிக்கேயா சபையின் காலம் என்பது பெந்தெகொஸ்தே சபையின் காலம். ஏனெனில் அதுவே கடைசி சபையின் காலமாகும். லூத்தர் தன் செய்தியைக் கொண்டு வந்தார். வெஸ்லியும் தன் செய்தியைக் கொண்டுவந்தார். பெந்தெகொஸ்தேயும் தங்களுடைய செய்தியைக் கொண்டிருந்தனர். 15“நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாய் இருக்கிறபடியால்” என்று கூறப்பட்டுள்ளது. வெளிப்புற உணர்ச்சிகள், சுவிஷேத்தைக் குறித்து சொந்த கற்பனையை தங்கள் சிந்தையில் உருவாக்கிக் கொள்ளுதல். “நீ அவ்விதம் இருப்பதால், உன்னை என் வாயினின்று வாந்தி பண்ணிப்போடுவேன்” என்றார் அவர். வேறுவிதமாகக் கூறினால், சபையை அந்நிலையில் காண அவருக்கு அருவருப்பாய் இருந்தது. 16சபையும் அவரை வாந்தி பண்ணிப்போட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்தப் பயங்கரமான லவோதிக்கேயா சபையின் காலத்தில் அவர் சபையின் வெளியே நின்று கொண்டு, உள்ளே வர முனைந்து கொண்டிருக்கிறார். 17இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் இன்று... சாத்தானை ஆராதிக்கிறோமென்று ஜனங்கள் அறியாமலிருக்கின்றனர். ஆனால் அது சாத்தான் தன்னைத்தானே சபையாக பாவனை செய்து கொண்டிருத்தலாகும், பாருங்கள்? ஒரு சபையைப் போல. அவர்கள் சபையின் மூலமாக தேவனை தொழுது கொண்டிருக்கிறோம் என்று எண்ணி, அவர்கள் சாத்தானை தொழுது கொண்டிருக்கின்றனர். சாத்தான் இவ்வுபாயத்தைக் கையாண்டிருக்கிறான். நீங்கள், “ஓ, ஒரு நிமிடம் பொறும்; நாங்கள் வார்த்தையைத் தான் பிரசங்கிக்கிறோம்” என்று கூறலாம். இன்றிரவு பிரசங்கிக்கவிருக்கும் பொருளைப் பாருங்கள். “தேவன் கூறியுள்ளார்” என்று வார்த்தையை முதன் முதலாக ஏவாளுக்குப் பிரசங்கித்தது சாத்தானாகும். பாருங்கள்? அக்காலத்துக்குரிய வேதவாக்கியத்தை அவன் தவறாக விளக்கம் செய்தான். இயேசு செய்த யாவும் முற்றிலும் சரியென்று அவன் உங்களிடம் கூறுவான். மோசே செய்த யாவும் முற்றிலும் சரியென்பான் அவன். ஆனால் இக்காலத்திற்கென அவர்கள் அளித்திருக்கிற வாக்குத்தத்தங்களை நீங்கள் சிந்திக்க முற்பட்டால், அவை வேறொரு காலத்துக்குரியவை எனக் கூறி ஜனங்களைத் தவறாக நம்பச் செய்வான். அதைத்தான் அவன் செய்ய வேண்டியவனாக இருக்கிறான், (பாருங்கள்?) மக்களை அந்த விதமாக அதை நம்பும்படியாகச் செய்வது, அவ்வளவு தான். தேவனுடைய வார்த்தையுடன் நீங்கள் எதையும் கூட்டவும் குறைக்கவும் கூடாது. ஆனால் சாத்தான் அதையே செய்து வருகிறான். 18தேவனை வழிபடுவதாக ஜனங்கள் கருதி, அறியாமையினால் சாத்தானை வழிபடுகின்றனர். 2 தெசலோனிக்கேயரில், தீர்க்கதரிசனத்தின் மூலமாக நாம் எச்சரிக்கப்படுகிறோம். அதை... நாம் அதை வாசிப்போம், இரண்டு தெசலோனிக்கேயர், 2ஆம் அதிகாரம். என்னால் கூடிய மட்டும் சற்று நாம் அதை சீக்கிரமாக பார்ப்போம். அதை நான் வாசிக்க விரும்புகிறேன். இரண்டு தெசலோனிக்கேயர் என்று நான் நம்புகிறேன். வேத வசனத்தை எடுத்துவிட்டேன். இரண்டாம்... “அன்றியும் சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையையும், நாம் அவரிடத்தில் சேர்க்கப்படுகிறது குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக் கொள்ளுகிறது என்னவென்றால், கர்த்தரின் வருகையும் அவரிடத்தில் சேர்க்கப்படுவதும் இக்கடைசி நாட்களில் தேவன் அவர் ஜனங்களை அவரிடம் சேர்த்துக்கொள்வார். கர்த்தரிடத்தில் ஜனங்கள் சேருவார்கள். ஸ்தாபனங்களிடத்திலல்ல, கர்த்தரிடத்தில், அவரிடத்தில் சேர்க்கப்படுதல். ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது, கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால் உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள். எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம் போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவ மனுஷன் (“பாவ மனுஷன்” இப்பொழுது அவன் என்னவாயிருக்கிறான் என்பதைக் கவனியுங்கள்) அந்த பாவ மனுஷன் (கேட்டின் மகன் யூதாஸ்) பாருங்கள்? வெளிப்பட்டாலொழிய அந்த நாள் வராது. அவன் எதிர்த்து நிற்கிறவனாயும், தேவனென்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன் போல உட்கார்ந்து தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்.“ 19இன்றைய சபையின் வஞ்சிக்கப்பட்ட நிலைமையைப் பாருங்கள் “கேட்டின் மகன்” அதாவது பிசாசு, “கேட்டின் மகன்” அந்த பிசாசு. பிறகு, இந்நாட்களில் ஜனங்கள் சாத்தானை வழிபட்டு, தேவனை ஆராதிப்பதாகத் தவறாக எண்ணியுள்ளனர். ஆனால் அவர்கள் அவனை ஒரு சபை கோட்பாடு, மனிதனால் உண்டாக்கப்பட்ட ஸ்தாபனங்கள், மற்றும் கோட்பாடுகள் மூலமாகச் சாத்தானைத் தொழுகின்றனர். இவையெல்லாம் ஜனங்களை இதுவரை உலகம் கண்டிராத வஞ்சகத்தில் கொண்டு சென்றுள்ளன. இக்காலத்துக்கென வாக்களிக்கப்பட்டுள்ள தேவனுடைய வார்த்தை எவ்வளவாகப் பிரசங்கிக்கப்பட்டு, அடையாளங்களாலும் அற்புதங்களாலும் உறுதிப்படுத்தப்பட்டாலும், இன்னுமாக அவர்கள் அதை விசுவாசிப்பதில்லை. அவர்கள் அதை விசுவாசிக்கமாட்டார்கள் பிறகு ஏன்? ஏன் என்று நாம் வியப்புறுகின்றோம். அது ஏன் இல்லை... ஜனங்கள் ஏன் அதை விசுவாசிப்பதில்லை? ஒரு காரியத்தை செய்யப்போவதாக தேவன் வாக்களித்து, அதை நிறைவேற்றினால், இன்னும் ஜனங்கள் அதற்குப் புறங்காட்டி அப்பால் செல்கின்றனர். தேவன் கூறினதை அவர் கண்டிப்பாக நிறைவேற்றுவார் என்று ஏவாளும் அறிந்திருந்தாள். ஆனால் அவர் சொற்களுக்குச் செவி கொடாமல் அவள் தன் முதுகைத் திருப்பினாள், அவன் என்ன கூறப்போகிறான் என்பதை கேட்பதற்கு. சற்று நினைவில் கொள்ளுங்கள், மற்ற காலங்களிலும், அதே விதமாகத்தான் இருந்தது. ஒவ்வொரு காலத்திலும், எப்பொழுதுமே சாத்தான் அவர்களுக்கு வார்த்தையை தாறுமாறாக்கிக் காட்டி, அவர்கள் ஏதோ ஒரு காலத்தைக் காணும்படிக்குச் செய்து கொண்டிருக்கிறான். 20பாருங்கள்! இயேசு இவ்வுலகில் தோன்றின காலத்தில் (பாருங்கள்) சாத்தான் யூத வேதபாரகரிலும், ரபிகளிலும், போதகரிலும் குடி கொண்டு, அந்த நாளில் மனுஷகுமாரன் வெளிப்படுத்தப்படுவார் பாருங்கள்? என்று அந்த அதே வார்த்தை கூறினபோதிலும், அவர்களிடம் மோசேயின் பிரமாணத்தை கைகொள்ளுங்கள் என்று கூறிக் கொண்டிருந்தான். அவன் என்ன செய்தான் என்று பாருங்கள்? அவன் அவர்களிடம், “வார்த்தையின் அந்த பாகம் முற்றிலும் சரியான ஒன்றுதான், ஆனால் இந்த மனிதன் அந்த நபர் அல்ல'' என்று கூற முயற்சித்துக் கொண்டிருந்தான். பாருங்கள், எவ்வளவாக வஞ்சிக்கிறவனாக உள்ளான்? பாருங்கள். உண்மையாகவே அது வஞ்சிக்கப்படும் காலமாயிருந்தது. 21சாத்தான் இப்பொழுதும் எப்பொழுதும் தன் இராஜ்யத்தை இவ்வுலகில் ஸ்தாபித்துக் கொண்டு வருகின்றான். சரியாக அதற்காகத்தான் அதைச் செய்து கொண்டிருக்கிறான், ஏனெனில் தன்னுடைய சொந்த ராஜ்யத்தை ஸ்தாபிக்க அவன் விரும்புகிறான். கிறிஸ்தவனல்லாத ஒரு வியாபாரியைப் போன்று அவன் தன் இராஜ்யத்தைக் கருத்தாக ஸ்தாபிக்க விழைகிறான். தவறான வழியில் நீங்கள் செல்ல வேண்டுமென்று அவன் எல்லாத் திட்டங்களையும் வகுத்துக் கொண்டு வருகிறான். தவறான பாதையில் நீங்கள் செல்வதனால் தனிப்பட்ட விதத்தில் அவனுக்கு இலாபமிருந்தால், சத்தியத்தை நீங்கள் காணாதவாறு அவனால் இயன்ற எல்லா உபாயங்களையும் அவன் கையாளுவான். ஏனெனில் அவன் சுயநல உணர்ச்சி படைத்தவன். அவன் அநேக பொய்களைக் கூறி ஏமாற்றுவதால் அவனுக்குப் பிரத்தியேக இலாபமுண்டு. 22எனவே தான் சாத்தான் இவைகளைக் கையாளுகிறான். தேவன் உரைத்துள்ளபடி, அவன் தேவ ஊழியத்தின் மூலாகவே செய்து கொண்டு வருகிறான். ஏதேன் தோட்டத்தில் மதசம்பந்தமான வஞ்சகத்தை அவன் ஆரம்பித்தான், அன்று முதல் அது நீடித்து வருகின்றது. கம்யூனிஸ்டுகளை ஏவிவிட்டு அவன் வஞ்சகம் செய்வதில்லை. அதற்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை, சபையால்தான். நீங்கள் கவனம் செலுத்த வேண்டியது சபைகளாகும். பாருங்கள்? தெரிந்து கொள்ளப்பட்டவர்களைக் கம்யூனிஸ்டுகள் வஞ்சிப்பதில்லை. ஸ்தாபனங்கள் தான் அவர்களை வஞ்சிக்க முற்படும். பாருங்கள்? அது கம்யூனிஸ்டுகள் அல்ல. கம்யூனிஸ்டுகள் தேவன் இல்லை என்கின்றனர். அவர்கள் அந்திக் கிறிஸ்து, கொள்கையின்படி அவர்கள் கிறிஸ்துவுக்கு விரோதமானவர்கள் என்பது உறுதி. ஆனால் அவர்கள் அந்திக் கிறிஸ்துவல்ல. அந்திக்கிறிஸ்து என்பவன் மதசம்பந்தமானவன். அவன் பக்தியுள்ளவனாய் வேத வசனத்தை மேற்கோள் காட்டி, அது மிகவும் தெளிவாகக் காணப்படும் விதத்தில் செய்வான், ஆதியிலே தேவனுடைய வார்த்தையைச் சாத்தான் உபயோகித்தது போன்று, அவனும் வேதவாக்கியங்களை எடுத்துரைப்பான். சாத்தான் ஏவாளிடம் 'தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்க வேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ!' என்று கேட்டான். பாருங்கள்? [அவள் கண்களை இழுத்தான்]. அதற்கு அவள்: “நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம். ஆனால் தோட்டத்தின் நடுவில் ஒரு விருட்சம் உண்டு. அதன் கனியை மாத்திரம் நாங்கள் புசிக்கலாகாது என்றும், அதைத் தொடவும் கூடாது என்றும் கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறார். ஏனெனில் அதைச் செய்யும் அந்நாளில் நாங்கள் சாகவே சாவோம்” என்றாள். 23சாத்தான் அவளிடம், “ஓ, நீங்கள் நிச்சயம் சாவதில்லை. கர்த்தர் ஏன் அவ்விதம் கூறினார் என்னும் காரணத்தை நான் சொல்கிறேன் ஏனெனில்...” என்றான். பாருங்கள், இந்த சத்தியத்தை அவன் மேற்கோள் காட்டினான், என்பதை நீங்கள் பாருங்கள். அவன், “அது உங்கள் கண்களைத் திறக்கும். நீங்கள் நன்மை தீமை அறியும்படி செய்யும். நீங்கள் இதை செய்வீர்களானால், அப்பொழுது நீங்கள் தேவனைப் போல் இருப்பீர்கள்,” என்று வியாக்கியானம் செய்தான். அதைத்தான் அவன் செய்ய விரும்புகிறான். இன்றைக்கும் அதையே அவன் செய்து கொண்டு வருகிறான், ஏதேன் தோட்டத்தில் மதசம்பந்தமான வஞ்சகம் ஆரம்பமாகி, இன்று வரை தொடர்ந்து வருகின்றது. ஆதாமின் காலத்தில் வஞ்சகம் உண்டாயிருந்தது. நோவாவின் காலத்திலும் வஞ்சகம் தோன்றினது, இயேசுவின் காலத்திலும் அவ்வாறே இருந்தது. இன்றைக்கு அதுவே அதேவிதமாகவே நிகழ்கின்றது. மதசம்பந்தமான வஞ்சகம். 24இப்பொழுது நாம் பூமியை கவனிப்போமானால், தேவன் அதை தம்முடைய ஆதிக்கத்தில் கொண்டிருந்தார், தேவன் தம்முடைய ஆதிக்கத்தில்... இவ்வுலகை அவர் ஆதிக்கத்தில் கொண்டிருந்தபோது தேவனுடைய வார்த்தை புறக்கணிக்கப்பட்டதன் விளைவாக சாத்தான் ஆதிக்கத்தைக் கைப்பற்றிக் கொண்டான். ஒரு சமயம் தேவன் இப்பூமியை அவர் ஆதிக்கத்தில் கொண்டிருந்தார். அதன் சுழற்பாதையில் அதனை வைத்தார். அப்பாதையில் அது சுழலும்படி செய்தார். எல்லாவற்றையும் அவர் செய்தார். தம்முடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இப்பொழுது சாத்தான் ஆதிக்கத்தைக் கைப்பற்றிய பின்னர் என்ன நேர்ந்தது என்று கவனிப்போம். 25இப்பூமியைக் கட்டி முடிப்பதற்குக் கர்த்தருக்கு 6000 ஆண்டுகள் சென்றன. அத்தனை ஆண்டுகள் அவருக்கு அவசியமில்லை. ஆனால் அவர் அவ்வளவு சமயம் எடுத்துக் கொண்டார். ஆம், ஆறாயிரம் ஆண்டுகள், ஏனெனில் பரலோகத்தில் ஒரு நாள் பூலோகத்தில் ஆயிர வருடகாலமென்று நமக்குக் கற்பிக்கப்பட்டுள்ளது. 6,000 ஆண்டுகள் அல்லது ஆறு நாட்கள் கர்த்தர் பூமியைக் கட்டினார். பூமியை நிறுவனம் செய்ய அவருக்கு ஆறாயிரம் ஆண்டுகள் சென்றன. நல்ல விதைகளை அவர் விதைத்து, அவை தங்கள் தங்கள் விதையையுடைய கனிகளை முளைப்பிக்கச் செய்தார். அனைத்தும் தங்கள் தங்கள் இனங்களை முளைப்பிக்க வேண்டும். அவர் சிருஷ்டித்த விதைகள் யாவும் நல்லவையானதால், அவை தங்கள் தங்கள் இனங்களை முளைப்பிக்க வேண்டும். கர்த்தருக்கு 6000 ஆண்டுகள் பிடித்தன. 26கடைசியாக, இவையாவையும் அவர் சிருஷ்டித்த பின்னர், இறுதியாக ஏதேனுக்கு கிழக்கிலுள்ள ஏதேன் தோட்டம் என்னும் அழகிய ஸ்தலத்தில் அவர் தமது இருப்பிடத்தை அமைத்துக் கொண்டார், தேவன் உலகத்தின் தலைமை செயலகத்தை எகிப்தில், ஏதேன் தோட்டத்தில் வைத்தார், சரியாக தோட்டத்தின் கிழக்கு முடிவு பகுதியில் தலைமையகம் இருந்தது. 27கவனிக்கவும், அவனுக்கு அவருடைய உலகம் இருந்தது, எல்லாவற்றிற்கும் அதிகாரிகளாக தம் புத்திரனையும் அவன் மனைவியையும் அவர் நியமித்தார். அது உண்மை, அதைத்தான் கர்த்தர் செய்தார். அவர் முழு ஆதிக்கத்தையும் அவர்களுக்களித்தார். அவர்கள் காற்றைக் கட்டளையிட்டால், காற்று அடிக்காமல் நின்றுவிடும். மரங்களுக்குக் கட்டளையிட்டால், அவை ஸ்தலம் மாறும். சிங்கமும் ஓநாயும் ஒருமித்து இரை தின்றன. அவைகளிடையே ஆட்டுக்குட்டி படுத்துக்கொள்ளும். பொல்லாங்கு என்பதே அப்பொழுது கிடையாது. தேவனுடைய ஆதிக்கத்தின் கீழ்பரிபூரண சமாதானமும் பரிபூரண இசைவும் காணப்பட்டு, எல்லாமே பரிபூரணம் அடைந்திருந்தன. கவனியுங்கள், அவனுக்கு அவருடைய உலகம் இருந்தது, எல்லாமே இயங்க அவர் செய்தார். எல்லாவற்றையும் அவர் கொண்டிருந்தார், எல்லாமே புல்பூண்டுகள் புசித்தன. எதுவுமே சாகவேண்டிய அவசியம் இருக்கவில்லை. எதுவும் அழிய வேண்டிய அவசியம் உண்டாயிருக்கவில்லை. எதுவும்... எல்லாமே பரிபூரணமுள்ளதாய் இருந்தன. எல்லாவற்றிற்கும் அதிகாரியாக அவர் தமது அருமைப் பிள்ளைகளை, அவருடைய புத்திரனையும் புத்திரியையும், கணவன் மனைவியாக நியமித்தார். 28தேவன் அதிக திருப்தி கொண்டிருந்ததால், ஏழாம் நாளில் அவர் தம் கிரியைகளை முடித்து ஓய்ந்து, ஏழாம் நாளாகிய ஓய்வு நாளைப் பரிசுத்தமாக்கினார். 6000 ஆண்டு காலமாக அவர் உருவாக்கி உண்டாக்கினவைகளை அவர் திரும்பவும் ஒருமுறை பார்த்தார். அவர் மலைகளை உயரே தள்ளி, எரிமலைகளின் குழம்பை உலரச் செய்து, தற்போதைய நிலைகளில் அவைகளை நிறுவினார். ஓர் அழகிய ஸ்தலமாக அது அமைந்திருந்தது. 29அதைப் போன்று வேறெதும் காணப்படவில்லை. தேவனுடைய மகத்தான பரதீசில் டைனோசார் (Dinosaur) என்னும் பிரம்மாண்டமான மிருகங்கள் ஊர்ந்து கொண்டிருந்தன, அவை யாருக்கும் தீங்கிழைக்கவில்லை; பூனைக்குட்டிகளைப் போன்று அவை சாதுவான குணம் படைத்திருந்தன. அவர்களுக்கு எதுவும் இல்லை: அப்பொழுது பூமியில் வியாதிகளும், வருத்தங்களும், வியாதிகளை உண்டு பண்ணும் கிருமிகளும் இல்லை. ஓ! என்னே ஓர் ஸ்தலம். அழகிய பறவைகள் மரத்துக்கு மரம் பறந்து கொண்டிருந்தன. ஆதாம் அவைகளைப் பெயர் சொல்லி அழைக்க, அவை பறந்து வந்து அவன் தோள்களின் மேல் அமர்ந்து அவனிடம் கூவும். ஓ! தேவன் வைத்திருந்த ஸ்தலம் எவ்வளவு அற்புதமாயிருந்தது! 30தேவன் தம் சொந்த சரீரத்திலிருந்து தம் தன்மைகளில் (attributes) ஒன்றை வெளியே கொணர்ந்தார். தேவன் தம்முடைய சரீரத்தில் தன்மைகளைக் கொண்டிருந்தார். நீங்கள் உங்கள் தகப்பனின் தன்மையைப் பெறுவது போல, ஆகவே நீங்கள் கவனியுங்கள். நீங்கள் உங்கள் பாட்டனாருடைய பாட்டனாருடைய பாட்டனாருக்குள் இருந்தீர்கள். உங்கள் தகப்பனாருக்குள் நீங்கள் இருந்ததாக வைத்துக் கொள்வோம். உங்கள் தகப்பனாருக்குள் இருந்தபோது, நீங்கள் ஒன்றுமே அறியவில்லை. ஜீவனையளிக்கும் கிருமி ஆண் மகனிலிருந்து தோன்றுகின்றது. ஆண் மகனில் இரத்த அணுக்கள் உள்ளன. பெண்ணிடம் முட்டை உள்ளது. இப்போது, இரத்த அணுக்களில் ஜீவன் உண்டு. உங்கள் தகப்பனாருக்குள் இருந்த போது நீங்கள் ஒன்றையும் அறியவில்லை. ஆயினும், உங்கள் தகப்பனாருக்குள் நீங்கள் இருந்ததை விஞ்ஞானமும் தேவனுடைய வார்த்தையும் நிரூபிக்கின்றன. ஆனால் நீங்கள் அறியவேயில்லை. உங்களை அறிய வேண்டுமென்னும் ஆவல் உங்கள் தகப்பனாருக்குத் தோன்றியபோது உங்கள் தாயுடன் அவர் இணைந்தார். அதன் விளைவாக உங்கள் தகப்பனாருக்கு நீங்கள் வெளிப்பட்டீர்கள். நீங்கள் உங்கள் தகப்பனாரின் தன்மையாம். காண்பதற்கு நீங்கள் அவரைப் போன்றே இருக்கின்றீர்கள். உங்கள் சரீர அங்கங்களும் உங்கள் தகப்பனாரின் அங்கங்களின் சாயலுக்கு ஒத்திருக்கின்றன. இப்பொழுது, அந்த விதமாகத்தான் தேவன் ஆதியில் இருந்தார். தேவனுடைய ஒவ்வொரு புத்திரனும் புத்திரியும் ஆதியில் அவருக்குள் இருந்தனர். ஆனால் இப்பொழுது அது உங்களுக்கு ஞாபகமில்லை. அங்கு தான் நீங்கள் இருந்தீர்கள். அவர் அதை அறிந்திருந்தார். உங்களிடம் பேசவும், உங்களை சிநேகிக்கவும், உங்களிடம் கைகுலுக்கவும் எண்ணி நீங்கள் உருவெடுக்க வேண்டுமென அவர் விரும்பினார். 31உங்கள் மகன் போர்க்களத்தில் பெற்ற வடுக்கள் கொண்டவனாய் வீடு திரும்பி உங்களுடன் மேசையில் அமர்ந்து ஆகாரம் அருந்தும் நாள் ஒரு மகத்தான நாளாயிருக்கும் அல்லவா? ஓர் நல்ல விருந்தை அவனுக்காக ஆயத்தம் செய்து, கொழுத்த கன்றை அடிப்பீர்கள் அல்லவா? ஏனெனில் அவன் உங்கள் சொந்த மாமிசமும் இரத்தமுமாயிருக்கிறான். அவன் உங்களுக்குள் இருந்தான். ஆனால் வெளிப்படையாக அப்பொழுது நீங்கள் அவனை அறிந்து கொள்ளவில்லை, ஆனால் அவன் உங்களுக்குள் இருந்தான் என்பதை நீங்கள் அறிந்திருந்தீர்கள். 32ஆகவே, தேவன் நாம் அவருக்குள் இருந்ததை அறிந்திருந்தார். நம்மிடம் தொடர்பு கொள்ள எண்ணி நம்மை மாமிசத்தில் தோன்றச் செய்தார். நம்மிடம் தொடர்பு கொள்வதற்கென அவரும் நம்மைப்போல் ஒருவராக, தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவாக தேவனுடைய பரிபூரணத்தை வெளிப்படுத்துபவராகத் தோன்றினார். எனவே அவருடைய தன்மைகளை வெளியரங்கமாக்கி அவர்களுடன் ஐக்கியம் கொள்வதே தேவனுடைய நோக்கமாயிருந்தது. என் தகப்பனாருக்குள் நான் இருந்ததை அறியவேயில்லை. நான் அவர் மூலம் பிறந்து அவர் குமாரனானபோது, நான் அவருடைய தன்மையாக, அவருடைய ஒரு பாகமாக இருக்கின்றேன். தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் தேவனுடைய தன்மையின் பாகங்களாக அவருக்குள் இருந்தோம். தேவனுடைய குடும்பத்தின் அங்கத்தினராக இவ்வுலகில் நாம் ஒருவரோடொருவர் ஐக்கியம் கொள்வதற்கென, அவர் மாமிசமானது போல நாமும் மாமிசமானோம். இதுதான் ஆதியில் தேவன் கொண்டிருந்த நோக்கமாயிருந்தது. ஆம் ஐயா, தேவன் ஆதியில் இதைத்தான் விரும்பினார். எல்லாம் அவருடைய ஆதிக்கத்தின் கீழ் இருந்தன. அவர் மனிதனுக்குச் சுவாதீனத்தை அளித்து அவனை ஏதேன் தோட்டத்தில் வைத்து, “மகனே இது உன்னுடையது” என்றார். 33எவ்வளவு அழகான ஓர் ஸ்தலம். தேவன் எல்லாவற்றிலும் அதிக திருப்தி கொண்டிருந்ததால் அவருடைய கிரியைகளை முடித்து அவர் ஓய்வெடுக்கச் சென்றார். எந்த ஒரு மரமும் முட்களையும் குருக்களையும் முளைப்பிக்கவில்லை. அவ்வாறே முட்செடியிலிருந்தும் நல்ல பழங்கள் தோன்றவில்லை. எல்லாமே பரிபூரணமாயிருந்தது. எல்லா விதைகளும் பரிபூரணமாயிருந்தன. எல்லாமே பரிபூரண நிலையை அடைந்திருந்தன. பின்னர், அவர் ஓய்வெடுக்கச் சென்றிருந்தபோது, அவருடைய சத்துரு தந்திரமாக உள்ளே நுழைந்து, அவருடைய பிள்ளைகளிடம் தேவனுடைய திட்டத்தைக் குறித்துத் தவறான வியாக்கியானம் அளித்து அதைக் கைப்பற்றிக் கொண்டான். அவர் தனது சொந்த குமாரன் மீது நம்பிக்கை வைக்கும்போது, உங்கள் மகள் இரவு நேரத்தில் ஒரு ஆண்மகனுடன் செல்வாளெனில், அவள் தவறாக நடந்து கொள்ளமாட்டாள் என்னும் நம்பிக்கை அவள் பேரில் வைத்திருப்பீர்கள் அல்லவா? அவ்வாறே குடிப்பழக்கம் அல்லது புகைபிடிக்கும் பழக்கம் கொண்ட ஒருவனுடன் உங்கள் மகனை அனுப்பும்போது, அவன் இப்பழக்கம் வழக்கங்களைக் கற்றுக் கொள்ளமாட்டான் என்னும் நம்பிக்கையுடன் அவனை அனுப்புவீர்கள். பாருங்கள்? அது போன்றே தேவனும் அவருடைய குமாரன் தவறு செய்யமாட்டான் என்றும், அவர் கூறின வார்த்தைகள் அனைத்தையும் கைக்கொள்வான் என்னும் நம்பிக்கையை அவன் பேரில் வைத்திருந்தார். ஆனால் சத்துரு தந்திரமாக உள்ளே நுழைந்தான். அந்த வழுவழுப்பான மோசக்காரன் எவ்விதம் ஒருவன் உங்கள் மகளுடன் தவறாக நடந்து கொள்வானோ, அல்லது ஒரு பெண் உங்கள் மகனை வசீகரப்படுத்தி அவனைக் கொண்டு சென்றுவிடுவாளோ, அதே போன்றுதான். பாருங்கள்? அவன் வளவளப்பாக வழுக்கி நுழைந்தான். தேவனுடைய சத்துரு தந்திரமாக உள்ளே நுழைந்து, ஏவாளிடம் வார்த்தைக்குத் தவறான வியாக்கியானம் அளித்தான். 34இப்போது, ஆதாமின் வீழ்ச்சியின் விளைவாக சாத்தான் ஏதேன் தோட்டத்தைக் கைவசப்படுத்திக் கொண்டான். அவன் அதை எடுத்துக் கொண்டான். அவன் 6000 ஆண்டுகாலமாகத் தன் வஞ்சக ஆட்சியைச் செய்துவருகிறான். அப்பொழுது போல் இப்பொழுதும் அவன் தேவனுடைய பிள்ளைகளை ஏமாற்றிக் கொண்டு வருகிறான். தேவன் அவர்கள் விருப்பப்படி நடக்க அவர்களுக்கு சுயாதீனத்தை அளித்து அவர்கள் மீது வைத்திருந்தார்கள். ஆனால் அவர்களோ தவறாக நடந்து, ஏசாவைப் போல் தங்கள் சேஷ்டபுத்திர பாகத்தை இவ்வுலகிற்கு விற்றுப் போட்டனர். அதன் விளைவாக சாத்தான் வெற்றியடைந்து ஆதிக்கத்தைக் கைவசப் படுத்திக் கொண்டான். எவ்வாறு ஏதேன் தோட்டத்தைக் கட்டிமுடிக்க தேவனுக்கு 6000 ஆண்டுகள் சென்றனவோ, அவ்வாறே சாத்தானும் மக்களை வஞ்சித்து, தேவனுடைய வார்த்தையை அவமாக்கிப் பாவம் நிறைந்துள்ள அவன் ஏதேனை 6000 ஆண்டு காலமாக இவ்வுலகில் நிலைநிறுத்தி வருகிறான். 35தேவனுடைய ஏதேன் நீதியின் அடிப்படையில் நிலைநாட்டப்பட்டது. ஆனால் சாத்தானின் ஏதேன் பாவத்தின் அடிப்படையில் ஸ்தாபிக்கப்பட்டது. ஏனெனில் சாத்தான் பாவமாயிருக்கிறான். தேவன் நீதியாயிருக்கிறார். தேவனுடைய இராஜ்யம் நீதியிலும், சமாதானத்திலும், ஜீவனிலும் ஸ்தாபிக்கப்பட்டது. சாத்தானின் ஸ்தாபிதமோ பாவத்தை மதசம்பந்தமான பாவத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. கவனியுங்கள் அவன் கூறினது போன்றே அவன் ஏமாற்றினான். சாத்தான் ஏமாற்றப் போவதாக உறுதி கூறினானென்று உங்களுக்குத் தெரியுமா? ஏசாயாவுக்கு வருவோம். இன்னும் அதிகமான வேதவாக்கியங்களை நான் எடுத்துரைக்க வேண்டுமென்று கருதுகின்றேன். ஏசாயா 14-ம் அதிகாரத்துக்குத் திருப்பி, சாத்தான் என்ன கூறினான் என்பதை சற்றுக் கவனிப்போம். ஏசாயா 14ல், அதைப் படிப்போம். அவன் என்ன செய்தான் என்பதைப் பாருங்கள். ஏசாயா14ம் அதிகாரம், 12ம் வசனம் முதல். “அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே வீழ வெட்டப்பட்டாயே! நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு (அதாவது புத்திரர்களுக்கு) மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்று நீ உன் இருதயத்தில் சொன்னாயே.“ 36இவ்வேதவாக்கியங்களை நாம் சற்று முன்பு படித்த தெசலோனிக்கேயர் நிருபத்திலுள்ள வேதவாக்கியங்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்: எவ்வாறு அவன் “தேவனுடைய ஆலயத்தில் உட்கார்ந்து தேவனுக்கு மேலாகத் தன்னை உயர்த்தி, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான் ஆகவே, அவன் பூமியில் தேவனைப் போல் வீற்றிருந்து, தேவனாக ஆராதிக்கப்படுவான்.” சென்ற ஞாயிறன்று நான் உங்களிடம் பிரசங்கம் செய்த இப்பிரபஞ்சத்தின் தேவன் இவனே, இங்கே இன்றைக்கு அவன் வேண்டுமென்றே தவறான வழி காட்டுதலில் இருண்டகத்தில் இருக்கிறான், அந்த நம்பிக்கைத் துரோகமான மணி நேரம், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பிரம்மாண்டமான காலம்! எல்லாக் காலங்களைக் காட்டிலும் இது மிகவும் மகிமையான காலம். ஏனெனில் மகத்தான ஆயிரவருட அரசாட்சியை நாம் மறுபடியுமாக எதிர் நோக்கியிருக்கிறோம், ஏதேனை மறுபடியும் அடைய நாம் காத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இதே காலத்தில் தான் சாத்தான் மக்களை ஏமாற்றுவதற்கென அவனுடைய எல்லா உபாயங்களையும் தந்திரங்களையும் கொண்டு தன்னைப் பலப்படுத்திக் கொண்டு, தேவனைப் போல் இறங்கி வந்து, தேவனுடைய ஸ்தானத்தில் தன்னை பொருத்திக் கொண்டு; பக்திவாய்ந்தவனாக, வேத வசனங்களை மேற்கோள் காட்டி, உனக்கு வேதவாக்கியத்தையும் அவனால் கூறமுடியும், ஏதேன் தோட்டத்தில் ஏவாளுக்கு சாத்தான் செய்தது போல. ஆனால் அவன் செய்வது என்னவெனில், வேதவாக்கியங்களிலிருந்து ஒன்றை மாத்திரம் அவன் விட்டுவிட்டு, இடைவெளியை உண்டாக்கி, அந்த இடைவெளியில் தன் விஷத்தைப் புகுத்துகின்றான். கடந்த இரவு நாம் பேசிக் கொண்டிருந்த அந்த சிந்திக்கும் மனிதனின் வடிகட்டி பொருளைப் போல. 37இப்போது, அவன் தன்னை உன்னதமானவருக்கு மேலாக உயர்த்திக் கொள்ளப் போவதாகவும், மேகங்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் மேலாக ஏறிச் சென்று தேவனைப்போல் வீற்றிருக்கப் போவதாகவும் கூறினான். அவன் பயமுறுத்தலை அவன் நிறைவேற்றி வெற்றியடைந்தான். அந்தந்தக் காலத்துக்கென அளிக்கப்பட்டுள்ள தேவனுடைய வாக்குத்தத்தத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்துப்போட ஒவ்வொரு காலத்திலும் ஜனங்கள் அவனை அனுமதித்ததன் விளைவாக அவன் தனது அச்சுறுத்தல்களைச் செய்வதில் அமோக வெற்றி கொண்டுள்ளான். ஒவ்வொரு காலத்திலும் அவன் அதையே செய்து வருகிறான். 38நோவாவின் நாட்களில், வானத்தில் தண்ணீர் இல்லாததால் மழை பெய்வது என்பது கூடாத ஒரு காரியம் என்று அவன் விளக்கம் கூறினான். ஏதேன் தோட்டத்தில் அவன் பிரசங்கித்த சிறந்த விஞ்ஞான ரீதியான அதே சுவிசேஷம். சந்திரனுக்கு விஞ்ஞான கருவிகளை அனுப்பி அங்கு தண்ணீர் கிடையாது என்று அவனால் நிரூபிக்க முடியுமென அவன் உரைத்தான். ஆனால் மழை வரப்போகிறது என்று தேவன் கூறியிருந்தார். விஞ்ஞான ஆராய்ச்சி அது சாத்தியமல்ல என்று கூறுகின்றது என்று சாத்தான் சொல்லி, ஜனங்களின் மனதில் விஷமேற்றினான். ஆனால் அவ்வாறே மழை பெய்தது. மழை பெய்யுமென்று தேவன் கூறியிருந்தார். அவ்வாறே மழை பெய்தது. அவர் செய்தார். 39இப்போது, இயேசுவின் நாட்களிலும் அவன் அதே காரியத்தைத்தான் செய்தான். சாத்தான் தேவனுடைய வார்த்தைக்குத் தவறான அர்த்தமளித்து ஜனங்களின் மனதில் விஷமேற்றி அவர்களை ஏமாற்றினான். பாருங்கள்? அவன் இயேசுவிடம், “நீர் தேவனுடைய குமாரனானால் இவ்விதம் செய்வதை நான் காணட்டும்” என்றான். பாருங்கள், இயேசுவோ அவனுக்கு இணங்கவில்லை. சாத்தான் சொன்னபடி செய்வதற்குத் தேவன் ஒரு கோமாளியல்ல. அவனுக்கு மறுஉத்தரவு அருள அவருக்கு அவசியமில்லை. இயேசு அவனிடம், “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே” என்றார். அவர் அவனுக்காக கோமாளித்தனம் செய்ய அவசியமில்லை. கற்களை அப்பங்களாக மாற்ற வேண்டிய அவசியம் அவருக்கில்லை. அவரால் அதைச் செய்யமுடியும். அப்படியானால் அவர் பிசாசுக்கு செவிகொடுப்பவராய் இருப்பார். பிசாசுக்குச் செவிகொடுக்க அவருக்கு அவசியமில்லை. 40ஆதியில் நடந்தது போன்று மறுபடியும் மதசம்பந்தமான பாவம். மிகவும் ஏமாற்றக் கூடியது. இப்போது கவனியுங்கள். விபச்சாரம், குடிவெறி தேவனுடைய நாமத்தை வீணில் வழங்குதல் போன்ற பழைய அன்றாடப் பாவங்களில் அது ஒன்றல்ல. அல்லவே அல்ல. இல்லை. அநேக ஆண்டுகளுக்கு முன்னால், 'நியாயத்தீர்ப்பின் போது ஏமாற்றம்' என்னும் பொருளின் பேரில் நான் நிகழ்த்திய பிரசங்கம், சற்று வயது சென்றவர்களே, உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஒரு வேசியானவள், அவள் அங்கே ஏமாற்றமடையப் போவதில்லை. தான் எங்கே செல்லப் போகிறாள் என்பதை அவள் அறிந்திருந்தாள். அவ்வாறே மது அருந்துபவனும் அங்கே ஏமாற்றமடையப் போவதில்லை, மது விற்பவனும், சூதாடுபவனும், பொய்யனும், திருடனும் அங்கு ஏமாற்றமடைவதில்லை. ஆனால், தான் செய்வது சரியென்று எண்ணிக் கொண்டிருந்த மனிதன் இருக்கிறானே, அவனுக்குத்தான் அப்பொழுது ஏமாற்றம். அவன், “ஆண்டவரே, நான் சுவிசேஷத்தை பிரசங்கிக்கவில்லையா? உமது நாமத்தினால் பிசாசுகளைத் துரத்தினேன் அல்லவா?” என்பான். 41அப்பொழுது இயேசு, “அக்கிரமச் செய்கைக்காரனே, என்னை விட்டு அகன்றுபோ. நான் உன்னை அறியேன்” என்று கூறுவார். அங்குதான் ஏமாற்றம் பாருங்கள் வஞ்சிக்கப்படுதல். இதைத்தான் நான் அடிக்கடி வலியுறுத்துகிறேன். அதனால் என்னைத் தவறாகப் புரிந்து கொள்கின்றனர். நான் வித்தியாசமுள்ளவனாய் இருக்க வேண்டுமென்பது என் நோக்கமல்ல. வித்தியாசமுள்ளவனாக இருக்க எனக்கு விருப்பமில்லை, ஆனால் நான் உத்தமமாக, இருக்க வேண்டியவனாயிருக்கிறன். நான் ஒரு செய்தியைக் கொண்டவனாக இருக்கிறேன். அது மக்களிடையே செல்லவேண்டும். அதை மக்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். நான் அவர்களுக்கு விரோதமாயுள்ளதாக அவர்கள் கருதுகின்றனர். என்னால் இயன்றவரை நான் என் இருதயத்தில் ஏவப்பட்ட விதமாகவும், வேதத்தில் கூறப்பட்ட விதமாகவும் அவர்களுக்குச் சத்தியத்தை எடுத்துரைக்கிறேன் என்றும், அவர்களெல்லாரையும் நான் சார்ந்தவன் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தால் எவ்வளவு நலமாயிருக்கும்! அது சத்தியம் என்பதைத் தேவன் நிரூபிக்கிறார். ஆகவே அதைக் குறித்து யாரும் ஒன்றும் செய்ய முடியாது. ஒன்று அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும், அல்லது நிராகரிக்க வேண்டும். 42பாருங்கள், ஏற்கனவே சேஷ்டபுத்திரபாகத்தை அவர்கள் ஸ்தாபனங்களுக்கு விற்றுப்போட்டதனால், சத்தியத்தை அறிந்து அவர்கள் விரும்புவதில்லை. ஸ்தாபனங்களின் தத்துவங்களின் அடிப்படையில் அவர்கள் பரலோகம் செல்லவிழைகின்றனர். அவையாவுக்கும் சாத்தானே அதிபதி. ஸ்தாபனங்களில் மார்க்கங்களைத் தேவன் எப்பொழுதுமே அங்கீகரித்ததில்லை. ஒருபோதும் செய்யவில்லை. ஆனால் இவர்களோ தங்களை விற்றுப்போட்டனர். ஒரு கூட்டம் மனிதர் தேவனுடைய வார்த்தைக்கு விளக்கம் கூறி, 'இதுதான் அதன் அர்த்தம், அதுதான் அதன் அர்த்தம்' என்கின்றனர். ''விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்“ அதை எவ்விதம் அர்த்தம் கொள்ள வேண்டுமென்று போதிக்க அவருக்கு யாருமே அவசியமில்லை. அவர் ஏகசக்கிராதிபதி. ஒரு காரியத்தைச் செய்வதாக அவர் கூறியிருந்தால், அவர் அவ்விதம் அவருடைய வார்த்தையை நிறைவேற்ற வேண்டியது அவசியம், ''விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்'' என்று அவர்களால் நடக்கும் அடையாளங்களை அவர் குறிப்பிட்டிருந்தால், அவர் அதை நிச்சயம் நிறைவேற்றுவார். கடைசி நாட்களில் என்னவெல்லாம் நிகழுமென்றும், அவர் என்ன செய்யப் போகிறாரென்றும் கூறியிருந்தாரோ, அவையாவையும் அவர் நிறைவேற்றினார். அதற்கெல்லாம் சமயமுண்டா இல்லையா என்று அவர் யாரையும் கேட்க வேண்டிய அவசியமில்லை. எந்தெந்தச் சமயத்தில் என்னென்ன நிகழ வேண்டுமென்னும் திட்டம் அவருக்குத் தெரியும். 43மத்தேயு 24:24-ல் கூறியுள்ளபடி சாத்தான் மோசம் போக்குகிறான்... சாத்தான் மனித அறிவின் அடிப்படையில் சுவிசேஷ திட்டத்தை உருவாக்கி, மேலான கல்வியறிவு, நீதிநெறி, நாகரீகம் போன்றவைகளால் தேவனை உண்மையாய் சேவிக்க ஆவல் கொண்டுள்ளவர்களை வசீகரித்து, அவன் கூறும் பொய்யை நம்பச் செய்கிறான். ஏவாள் அதைச் செய்ய விரும்பவில்லை. ஆனால் சாத்தானோ அவன் கூறுவதில் எவ்வளவு ஞானம் அடங்கியுள்ளது என்று அவளுக்குக் காண்பித்தான். அவள் ஒன்றும் அறியவில்லை, அவள் அறிந்து கொள்ள விரும்பினாள். அவளுக்குப் புரியவில்லை, ஆனால் அவள் புரிந்து கொள்ள விரும்பினாள். புரிந்து கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டாமென்று தேவன் அவளிடம் கூறியிருந்தார். எப்படி என்னால் இந்தக் காரியங்களை புரிந்து கொள்ள முடியும்? என்னால் இவைகளைப் புரிந்து கொள்ள இயலாது. நான் அவைகளை விசுவாசிக்கிறேன். அவைகளை நான் புரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. தேவனை நாம் விசுவாசிக்க வேண்டுமேயன்றி அவரைப் புரிந்து கொள்ளமுடியாது. அவர் கூறியதை நாம் அப்படியே விசுவாசிக்க வேண்டும். 44இப்போது, கர்த்தரின் ஏதேனை சாத்தானின் ஏதேனுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். தேவனால் வாக்களிக்கப்பட்ட வார்த்தையின் உண்மையான அர்த்தம் 6000 ஆண்டு காலமாக மாற்றப்பட்டு வந்ததன் விளைவாக சாத்தானின் ஏதேன் தோன்றியது. அதனை நாம் ஒப்பிட்டுப் பார்ப்போம். இயேசுவின் காலத்திலிருந்து சபையிலும் கூட தேவனுடைய உத்தமமான பிள்ளைகள் சத்தியத்தை அறிந்து கொள்ளாதவாறு சாத்தான் அவர்களைத் தடை செய்தான். தேவன் தம் தன்மைகளாகிய புத்திரரை இவ்வுலகில் தோன்றச் செய்து அவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு செவிகொடுப்பதன் மூலம் அவருடன் ஐக்கியங்கொள்ளச் செய்தார். 45உங்கள் தந்தை உங்களிடம் சொன்னால் - உங்கள் தகப்பனாருக்கு நீங்கள் விசுவாசமுள்ள புத்திரர். அவர் உங்களிடம், “மகனே, அக்குளத்தில் நீந்தச் செல்ல வேண்டாம். அங்கு முதலைகள் ஏராளமுண்டு” என்று கூறின பிறகு ஒருவன் உங்களிடம் வந்து, “அது அழகான நீச்சல் குளம். அங்கு முதலைகளே இல்லை” என்பானானால்... இப்போது, நீங்கள் யாருக்குச் செவி கொடுப்பீர்கள்? நீங்கள் உண்மையான குமாரராயிருந்தால், உங்கள் தகப்பனார் சொற்கேட்பீர்கள். தேவனுக்கு உத்தமமான குமாரரும் குமாரத்திகளும் தேவனுடைய வார்த்தையை முதலாவதாக ஏற்றுக் கொள்வார்கள். யார் என்ன கூறினாலும் அதைக் குறித்துக் கவலையில்லை. தேவனுடைய வார்த்தையை மாத்திரமே அவர்கள் முதலாவதாக ஏற்றுக் கொள்வார்கள். கோப்பையில் விஷமுண்டு என்று அவர் கூறினால் அவர்கள் அதை நம்புவார்கள். அவருடைய எல்லா வார்த்தையிலும் விசுவாசம் கொண்டவர்களாக, அவருடைய வித்துக்கள், பரிசுத்தமும், அன்பும், நித்திய ஜீவனும் பொருந்திய ஏதேனை கொண்டு வந்தனர். அதைத் தான் தேவனுடைய ஏதேன் உருவாக்குகிறது. பரிசுத்தமானதை, அது பரிசுத்தமான ஆன்பினால் ஆன, புரிந்துக் கொள்ளக்கூடிய, பரிபூரணமான மற்றும் நித்திய ஜீவனை கொடுக்கிற ஏதேனாய் இருக்கும். தேவன் விதைத்துக் கொண்டிருப்பது அதுதான், அவருடையவார்த்தை அவருடைய வித்து. கடைசியில் அவருடைய சபை அதுவாகத் தான் இருக்கும்; அது அதே விதமாகத்தான் இருக்கும். 46கவனியுங்கள், இங்கு ஒரு கருத்தைக் கூற விரும்புகிறேன். இதை மறந்து போக வேண்டாம். வேறொரு சமயத்தில் அல்லது வேறொரு செய்தியில் இதைக் குறித்து நான் கூறுவேன். ஆனால், உங்களுக்குத் தெரியுமா 'ஒவ்வொரு விதையும் அதனதன் இனத்தை முளைப்பிக்கக் கடவது' என்று தேவன் கட்டளையிட்டார். அது தேவனுடைய கட்டளையல்லவா? அந்த வார்த்தைக்கு வேறு அர்த்தம் தர ஒரு போதகரோ அல்லது மற்றெருவரோ முயல்வதனால் என்ன பயன்? பாருங்கள்? தேவனுடைய வார்த்தை ஒவ்வொன்றும் ஒரு விதையாகும். விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான் என்று இயேசு கூறினார், ஆகவே மாற்கு 16ல் கூறப்பட்டவை தேவனுடைய வார்த்தையானால், அது அதன் இனத்தையே முளைப்பிக்க வேண்டும். மல்கியா 4-ல் கூறப்பட்டது தேவனுடைய வார்த்தையானால் அது அதன் இனத்தை முளைப்பிக்கும். ஒவ்வொரு வாக்குத்தத்தமும் அதனதன் இனத்தை முளைப்பிக்க வேண்டும். 47பாருங்கள்? இங்கு சாத்தான் மாறுவேடத்தில் வருவதைக் காண்கின்றீர்களா? “அது அப்படியல்ல” என்று அவன் கூற முனைகிறான். நான் கூறுவது உங்களுக்குப் புரிகின்றதா? பாருங்கள்? “ஓ! அது இக்காலத்துக்குரியதல்ல. அது வேறொரு காலத்துக்குரியது, அதன் அர்த்தமும் அதுவல்ல” என்கின்றான். ஒவ்வொரு விதையும் அதனதன் இனத்தை முளைப்பிக்க வேண்டும். தேவன் அப்படித்தான் தம் ஏதேனை நிலைநாட்டினார். அது சரியா? இங்கே அது உள்ளது. அது போன்றே தேவன் தம் சபையையும் நிறுவியுள்ளார். தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் அதனதன் இனத்தை முளைப்பித்தல். “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.” பாருங்கள்? சாத்தான் வேறெதாவது ஒன்றைக் கூறுவான். ஆனால் தேவனோ, ஒவ்வொரு விதையும் அதனதன் இனத்தை முளைப்பிக்கும் என்றார். வாக்குத்தத்தமானது, “விசுவாசிகளை இந்த அடையாளங்கள் பின்தொடரும்” என்று கூறினால், இப்பொழுது சபையோ, 'எங்கள் சபையைச் சேர்ந்து கொள்ளுங்கள். ஸ்தாபன பிரமாணத்தை (Creed) திரும்பத் திரும்ப உச்சரியுங்கள். ஸ்தாபன கோட்பாடுகளை அறிந்து கொள்ளுங்கள்' என்று கூறுகின்றது. அவையாவும் வேதத்தில் கிடையாது. ஆனால் இயேசு, “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும். என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது. வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்” என்றார். இதை மறுக்க மனிதன் யார்? பாருங்கள்? 48ஒவ்வொரு விதையும் அதனதன் இனத்தை முளைப்பிக்கும். நீ தேவனுடைய வித்தாக, தேவபுத்திரனாய், அவருடைய தன்மையாய் இருப்பாயானால், தேவனுடைய வார்த்தை உனக்குள் விதைக்கப்பட்டிருக்கும். பாருங்கள்? நீ தேவனுடைய வார்த்தையைக் கேட்கும் போது “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவி கொடுக்கிறது. அவை அன்னியனுக்குப் பின்செல்லாது” உங்களுக்குப் புரிகின்றதா? ஒவ்வொரு விதையும் அதனதன் இனத்தை முளைப்பிக்க வேண்டும். 49இப்பொழுது நாம் காண்பதென்னவெனில், ஒவ்வொரு விதையும் அதனதன் இனத்தை முளைப்பிக்கும், அங்கே அந்த... ஏதேனில் மரணம் இல்லை; புதிய ஏதேனிலும் மரணம் இருக்காது. பாருங்கள். அங்கு பரிசுத்தம், தூய்மை, நித்திய ஜீவன் ஆகியவையன்றி வேறொன்றும் இருக்கவில்லை. இப்பொழுது, தேவனுடைய வார்த்தையை முழுவதுமாக விசுவாசிக்காததனால் பரிசுத்தமின்மை என்னும் விதை சாத்தானின் ஏதேனில் தோன்றியது, சாத்தான் அந்திக்கிறிஸ்துவாக, இப்பூமியின் ஏதேனில் சிங்காசனத்தைக் கைப்பற்றி அதில் வீற்றிருக்கும் கட்டத்தில் நாம் இப்பொழுது நுழைந்திருக்கிறோம் பாவம் நிறைந்த ஏதேன்; சத்தியத்தினின்று தவறின மார்க்கம். அவன், “நான் தான் சாத்தான், நான் தான் அந்த மகத்தான தூதன்” என்று பறைசாற்றி அதை தொடங்கவில்லை. இல்லை, அதன் அடிப்படையில் இல்லை. ஆனால், அவன் தேவனுடைய வார்த்தையை தாறுமாறாக்கி அதன் அடிப்படையில் அதை தொடங்கினான். ஒவ்வொரு காலத்திலும் அவன் இவ்வாறே தன் இராஜ்யத்தை ஸ்தாபித்து வருகிறான். மோசம் போக்கும் இந்த காலத்தில் சிங்காசனத்தைக் கைப்பற்றி பிரஜைகளை ஆள அவன் ஆயத்தப்படுகிறான். அவன் தனக்கென்று புத்தி கூர்மையான, கல்வியறிவுள்ள, விஞ்ஞான ஏதேனை உருவாக்கிக் கொண்டான். ஆம், விஞ்ஞான ரீதியான போதகர்கள், விஞ்ஞான சம்பந்தமான சபை, விஞ்ஞான அடிப்படை கொண்ட வேதத்தத்துவம் எல்லாமே விஞ்ஞானத்தையும் மனித அறிவையும் அடிப்படையாகக் கொண்டவை. ஸ்தாபனமெல்லாம் மனித அறிவை ஆதாரமாகக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. விசுவாசத்தை ஆதாரமாகக் கொண்டு அது கட்டப்படவில்லை. 50கூட்டம் ஒன்றை நடத்த ஒரு சமயம் நான் ஒரு மனிதனின் சபைக்குச் சென்றிருந்தேன். அது மேற்கில் அமைந்துள்ள ஒரு பெரிய மண்டபம். அம்மனிதன் மிகவும் நல்லவர்; ஆனால் நாம் விசுவாசிக்கும் வேத சத்தியங்களை அவர் மறுப்பவர், என்றாலும் அவர் பேரில் எனக்குப் பிரியமுண்டு. நல்ல மனிதன், அவர் வயது சென்றவர். அவரது சபையார் வெளியே சென்றபோது... அந்த மண்டபத்தில் 6000 பேர் அமரலாம். பகல் ஆராதனை முடிந்த பிறகு ஏறக்குறைய 1500 பேர் கொண்ட அவரது சபையார் மண்டபத்திலிருந்து வெளியேறினர். அவர்களெல்லாம் சிறந்த ஆடை அணிந்திருந்தனர்; கல்வியறிவு படைத்த மேதாவிகள். நான் உட்கார்ந்த வண்ணம் அவர்களைக் கவனித்துக் கொண்டேயிருந்தேன். அந்த மனிதன் மிகவும் நல்ல ஒரு பிரசங்கம் செய்தார். பிரசங்கம் முடிந்த பின்னர், கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ள விரும்புவர் கையுயர்த்துமாறு அவர் கூறினார். அப்பொழுது யாருமே கையுயர்த்தவில்லை. முடிவில் ஒரு ஸ்திரீ மாத்திரம் கையுயர்த்தினாள். இப்பொழுது “நீ ஒரு கிறிஸ்தவள்” என்று அவர் அவளிடம் கூறிவிட்டு ஞானஸ்நானம் கொடுக்க அவளைக் கூட்டிச் சென்றார். பின்னர் அவர் வெளியே சென்றுவிட்டார். அவர் ஒரு குழந்தையைப் பிரதிஷ்டை செய்து, அதற்கு முத்தம் கொடுத்து, ஒரு ஜெபம் செய்து விட்டு, கூட்டத்தை முடித்துக் கொண்டார். 51அவருடைய சபையார் வெளியேறினர் - அவர்களெல்லாரும் கல்வியறிவு படைத்த சிறந்த மேதைகள். போதகர் வெளியே சென்றபோது நான் அவர் பக்கத்தில் நின்று அவருடன் கைகுலுக்கி ஆசி கூறினேன். அதன்பின்பு என்னைச் சார்ந்த ஜனங்கள் உள்ளே வந்தனர். அந்த போதகருடைய சபையார் குழுமியிருந்த வரைக்கும் இவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. என் ஜனங்கள் சக்கர நாற்காலிகளிலும், நோயாளிகளைத் தூக்கிச் செல்லும் சாதனங்களிலும் (Stretchers) அங்கு வந்திருந்தனர். வித்தியாசத்தைக் கண்டீர்களா? அதுதான். அதைத்தான் கூறுகிறேன். பாருங்கள்? பாருங்கள்? இது வித்தியாசப்பட்ட ஒன்றாகும். 52விஞ்ஞான அறிவைக் கொண்டு, மனித புத்தியை அடிப்படையாகக் கொண்ட சுவிசேஷம் ஒன்றை உங்களால் உருவாக்க முடியும். ஆனால் “இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை,” பாருங்கள், “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்,” பாருங்கள், இதை அங்கே அவன் வைக்கத் தவறுகிறான் போன்ற வாக்குத்தத்தங்களை அவர்கள் ஏற்க மறுக்கின்றனர். பாருங்கள்? அவள் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தாள். இந்த அடையாளங்கள் விசுவாசியை பின்தொடருமானால், அவள் இரட்சிக்கப்பட்டவள். “என் வசனத்தைக் கேட்டு” காதுகளால் கேட்பது மாத்திரமல்ல, அது என்னவென்பதை புரிந்து கொள்ளவேண்டும். யார் வேண்டுமானாலும் அதைக் காதுகளால் கேட்கலாம். ஒரு வேசி அதை கேட்டு வேசியாகவே இருக்கக் கூடும். பாருங்கள்? மது அருந்துபவன் ஒருவன் அதை கேட்கலாம். ஒரு பொய்யன் அதைக் கேட்டு பொய்யனாகவே நிலைத்திருக்கலாம். ஆனால் “என் வசனத்தைப் புரிந்து கொண்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு,” அதுதான். பாருங்கள்? தேவன் ஒருவனை இதற்கென்று முன்குறித்திருந்தாலன்றி அவன் இதை செய்யவே முடியாது. “என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான். ஆமென். என் பிதா எனக்குத் தந்தவைகள் யாவும் என்னிடத்தில் வரும்” என்று இயேசு உரைத்தார். ஆமென்! இவை யாவும் அவர் ராஜாதிபத்தியத்திலும் முன்னறிவிலும் அடங்கியுள்ளது. அவர் தனியே வாசம் செய்கின்றார். என்ன செய்ய வேண்டுமென்று அவருக்குப் போதிக்க யாருமேயில்லை. 53இப்போது, தேவனுடைய வார்த்தை முழுவதையும் விசுவாசிக்காத காரணத்தால் அவிசுவாசம், பரிசுத்தமின்மை, பாவம், வெறுப்பு என்றும் வித்து தோன்றினது. நித்திய மரணம், பாவம் நிறைந்த அறிவு பெருத்த இதை சபைகாலத்தில் குடிகொண்டுள்ளது. புரிந்துவிட்டதா? முழு உலகமே பக்தியுள்ளதாய் இக்காலத்தில் காணப்படுகின்றது. இப்போது, உங்களுக்குத் தெரியுமா? உலகம் அனைத்துமே பக்தி வைராக்கியம் கொண்டுள்ளது. அப்படிப்பட்ட இக்காலத்தில், ஒவ்வொரு மூலையிலும் பிரம்மாண்டமான ஆலயங்கள் உள்ளன. ஆனால் எல்லாமே சாத்தானின் வழிபாட்டில் முடிவடைகின்றன. அதைக்குறித்து இவ்வேத புத்தகத்தில் நாம் காணலாம். அது சரி. மனித அறிவை ஆதாரமாகக் கொண்ட வேத கல்லூரிகள் அறிவு பெருத்த மனிதர்களைக் தோன்றச் செய்கின்றன. எப்படி பேச வேண்டுமென்றும், என்ன செய்ய வேண்டுமென்றும், எப்படி உணர்ச்சி வசப்பட வேண்டுமென்றும் மனோதத்துவ சாஸ்திர ரீதியில் இவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகின்றது. ஒரு மனிதனின் மனோநிலையுடன் எவ்விதம் ஈடுபட வேண்டுமென அறிந்து கொள்வதற்கு மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் பயிற்சி. பாருங்கள்? அது... வேதகல்லூரியில் பெறும் பயிற்சியின் மூலம் தேவ ஆவியானவர் உங்களுக்குள் வருவதில்லை. சர்வவல்ல தேவனின் கரம் முன்குறிப்பதன் மூலமே அவர் உங்களுக்குள் வருவார். வேதபள்ளியில் கல்வி பயில்வதனால் உங்களுக்கு இந்த அனுபவம் வருவதில்லை. தேவனுடைய கரத்தினாலும் அவருடைய முன்னறிவினாலும் அவர் உங்களுக்குள் வருகின்றார். அது சரி. 54இப்போது, இக்காலத்தில் வாழும் அந்த சபை, உலக ஏதேன் சாத்தானால் தோற்றுவிக்கப்பட்டது. உலக சபை மாநாட்டில் அவர்கள் ஒன்று இணைந்து ஒரே உலக சபையாக ஆகப்போகின்றனர். அவர்கள் யாவரும் ஒரு தலைவனின் கீழ் வருவார்கள். அப்பொழுது சாத்தான் சிங்காசனத்தில் அமருவான். முற்றிலும் சரியாக மணவாட்டி அதற்குள் நுழைவதைத் தடுக்க கடைசி அழைப்பு இப்பொழுது சென்று கொண்டிருக்கிறது. அவள் அதற்குள் நுழைந்துவிட்டால், மிருகத்தின் முத்திரையை அவள் தரித்து ஆக்கினை தீர்ப்படைவாள். அதனின்று அவள் ஒருபோதும் வெளியேற முடியாது. ஆகையால் தான் நான், “என் ஜனங்களே. அவர்களை விட்டு வெளியே வாருங்கள் என்று அவர்கள் நுழையுமுன்பே அவர்களை எச்சரித்து வருகிறேன். பாருங்கள், அவர்களிடமிருந்து விலகி, நீங்கள் பிரிந்து இருங்கள்.” 55இப்பொழுது, சாத்தானின் ஏதேனில் வெறுப்பு, மரணம், தேவனிடமிருந்து நித்தியமாய் பிரிவினை, இச்சை, அசுத்தம், நெறிதவறல் ஆகியவை காணப்படுகின்றன. ஏன்? தவறான விதை விதைக்கப்பட்டதன் விளைவாய். பெந்தெகோஸ்தே ஜனங்களை சந்திக்கு முன்பு நான் கண்ட தரிசனம் என் நினைவுக்கு வருகின்றது. அத்தரிசனத்தில் வெண் உடைதரித்து உலகத்தை சுற்றி விதை விதைத்து வருகின்றான். அநேகமுறை நான் அதை உங்களிடம் கூறியுள்ளேன். அவனுக்குப் பின்னால் வேறொவன் பிரிவினையின் விதைகளை விதைத்துக் கொண்டு வந்தான். ஏதேன் தோட்டத்தில் ஏவாள் கொண்டிருந்த பாவ இச்சையின் விளைவாக அவன் வெற்றி பெற்றான். ஏவாள் அறிவைப் பெறவேண்டுமென்று இச்சித்தாள்; அது பாவம். நாமும் அறிவைப் பெற இச்சித்தால், ஒரு Ph.D., L.L.D. பட்டங்கள் பெற விரும்பினால் அவ்விதம் செய்வது பாவமாகும். நான் கூறுவது கடுமையாக ஒருக்கால் தென்படும்; ஆனால் அது முற்றிலும் உண்மை. அறிவைப் பெற, புத்தியைப் பெற இச்சித்தல் என்பது. பாருங்கள்? இக்காலத்தில் நேரிடுவது என்னவெனில், தேவனுடைய வார்த்தையை ஜனங்களுடைய இருதயங்களில் நிலைநிறுத்த நாம் முனைவதில்லை; பாருங்கள்? அதற்குப் பதிலாக நம்மையே நாம் நிலைநிறுத்திக் கொள்ள முயன்று வருகிறோம். ஸ்தாபனங்களும் அவரவர் போதகங்களை மனிதரின் இருதயங்களில் வேரூன்றச் செய்ய விழைகின்றன. ஆனால், தேவனுடைய வார்த்தையை நிலைநிறுத்தவே நமக்குக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. “உங்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத்திலல்ல, தேவனுடைய பெலத்தில் பரிசுத்த ஆவியானவரின் கிரியைகளில் நிற்கும்படிக்கு, என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது” என்று பவுல் அப்போஸ்தலன் கூறியுள்ளார். ஆம், அதுதான் 56மனிதன் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வகை தேடுகின்றான். நாம் அதை மத்தியில் காண்கிறோம். ஒரு மனிதனை தேவன் ஊழியத்திற்கென்று நியமித்து அனுப்பினால் அனேகர் அவனைப்போல் பாவனை செய்கின்றனர். பாருங்கள். அவர்கள் தங்களையே நிலைநிறுத்திக் கொள்ள விரும்புகின்றனர். “நான், இதைச் செய்தேன், நான், என் ஸ்தாபனம் இவ்விதம் செய்தது” என்றெல்லாம் அவர்கள் கூறிக்கொண்டு தங்களை ஸ்தாபித்துக் கொள்ள விழைக்கின்றனர். நாம் எதைக் குறித்து பிரசங்கம் செய்கின்றோம்? நம்மை குறித்தா அல்லது தேவனுடைய இராஜ்யத்தைக் குறித்தா? தேவனுடைய வார்த்தையை நிலை நிறுத்துங்கள். அவிசுவாசத்தை அகற்றி தேவனுடைய இராஜ்யத்தைக் குறித்த தேவனுடைய வார்த்தையை நிலை நிறுத்துங்கள். தேவன் அதற்கென்று ஒரு மனிதனைத் தெரிந்து கொள்ளாவிடில், தேவனுடைய இராஜ்யம் அவனது இருதயத்தில் நிலைநிறுத்தப்படவே முடியாது. நினைவில் கொள்ளுங்கள், மனிதன் தன் எண்ணங்கள் சரியென்று கருதுவதனால் மோசம் போகின்றான். பாருங்கள்? “மனுஷனுக்குச் செம்மையாய் தோன்றுகிற வழியுண்டு,” கல்வியறிவு படைத்தவன் செய்வது ஒருக்கால் சரியெனத் தென்படலாம். 57சில ஞாயிற்று கிழமைகளுக்கு முன்னர் இச்சம்பவத்தை நான் உங்களிடம் எடுத்துரைத்தேன். மரிக்கும் தருவாயிலுள்ள என் குழந்தையின் அருகே நான் நின்று கொண்டிருந்தேன். அப்பொழுது சாத்தான் அங்கே நின்று, என்னிடம், “அன்றிரவு உன் தகப்பனார் உன் கரங்களில் உயிர் நீத்தார். உன் மனைவியும் மரித்து சவக்கிடங்கில் இருக்கிறாள். இப்பொழுது உன் குழந்தை சாகும் தருவாயில் உள்ளது. உன் ஜெபத்திற்கு பதிலுரைக்க நீ தேவனிடம் மன்றாடினாய். ஆனால் அவரோ திரையிட்டு மறைத்துக் கொண்டார். ஆயினும் அவர் நல்ல தேவன் தான், மேலும் அவர் சுகமாக்குபவர் என்று நீ கூறினாய். ஆனாலும் சரியென்று நீ கூறி அதற்காக நிற்கின்றாய், ஆனாலும் நீ கூறினதெல்லாம் தவறாயிருக்கின்றனவே,” என்றான். ஓ! மனித சிந்தைகொண்டு யோசித்தால் சாத்தான் கூறினது சரியே என்று தென்படலாம். அவன் ஏவாளிடம், “உன் கண்கள் திறக்கப்படும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப் போல் ஆவீர்கள்” என்று கூறியதும் சரியே. அவர்கள் நிர்வாணிகளாய் இருந்தார்கள் என்பதைக் கண்டுக் கொள்ளக் கர்த்தர் அனுமதிக்கவில்லை. அதை அவர்கள் அறிந்திருந்தால், நன்மை தீமை என்னவென்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள். சாத்தான் கூறியது முற்றிலும் சரி. பாருங்கள், ஆனால் அது தேவனுடைய வார்த்தைக்கு முரண்பாடாய் இருந்தது. 58வேதக்கல்லூரிகளில் பயிற்சி பெறும் போதகர்களும் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட வேதசாஸ்திரங்களைப் பயில்கின்றனர். அவர்கள் செய்வது சரியென ஒருக்கால் அவர்களுக்குத் தோன்றலாம். அவ்விதம் பயில்வதினால் ஒரு காரியத்தை அவர்கள் நன்கு அறிந்து கொள்ள வகையுண்டு. ஆனால் அது தவறான முறையாகும். தேவனுடைய வசனத்தை நாம் அர்த்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை. நாம் அதை விசுவாசிக்க வேண்டும். தேவன் ஒன்றைக் கூறினாரெனில், அத்துடன் அது முடிவு பெற்றுவிட்டது. பாருங்கள், தேவனுடைய எல்லா வசனங்களுமே அப்படித்தான். அது கூறப்பட்டவாறே அதை நாம் விசுவாசிக்க வேண்டும். ஓ! ஏவாள் ஒரு பி எச்டி (Ph. D) பட்டத்தை பெற எவ்வளவாக இச்சித்தாள்! அவளுக்கிருந்ததைக் காட்டிலும் அதிக அறிவு பெற அவள் எவ்வளவாக இச்சித்தாள்! 59கவனியுங்கள், மனிதனும் அவனது மனைவியும் எவ்வளவு ஒரே மாதிரியாக இருக்கிறார்கள்... தாமும் அவன் மனைவியும் தேவனால் நிறுவனம் செய்த ஏதேன் தோட்டத்தில் நிர்வாணிகளாய் இருந்தனர். இன்னமும் சில நிமிடங்கள் பேசி விட்டு முடிக்கப் போகிறேன். முடிவு பெறும் தருவாயில் அதைக் கவனிக்கவும். இதை ஒப்பிட்டு பார்க்கவும். தேவனுடைய ஏதேன் தோட்டத்தில் மனிதனும் அவன் மனைவியும் ஆடை எதுவும் அணியாமல் நிர்வாணிகளாய் இருந்தனர். அவர்கள் அதை அறியாமலிருந்தனர். ஏன் அவர்கள் அதை அறியாமலிருந்தனர்? ஏனெனில் பரிசுத்த ஆவியென்னும் பரிசுத்த திரையினால் அவர்கள் மறைக்கப்பட்டு, நிர்வாணம் என்னும் உணர்ச்சியற்றவர்களாயிருந்தனர். பாருங்கள்? அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு தான் இருந்தனர். ஆயினும் அவர்கள் நிர்வாணிகளென்று உணராமல் இருந்தனர். பரிசுத்த ஆவியானவரின் பரிசுத்தத்தால் அவர்கள் மூடப்பட்டிருந்தனர். அவர்கள் மறைக்கப்பட்டிருந்தனர். 60இன்றைக்கும் கூட தேவனுடைய மூடுதிரையால் மறைக்கப்பட்டவர்கள் பெண்களைக் கண்டு இச்சைக்குள்ளாகமாட்டனர். அவர்கள் தலைகளை மறுபக்கம் திருப்பிக் கொள்வார்கள். அது ஒரு பரிசுத்ததிரை - பரிசுத்ததிரை. அவர்கள் கண்களைத் தேவன் இத்திரையினால் மறைத்திருக்கிறார். ஏதேன் தோட்டத்தில் இருந்தவர்களில் ஒருவன் ஆண், மற்றொருவள் பெண். ஆயினும் அவர்கள் நிர்வாணிகளென்று அறியாமலிருந்தனர். ஏனெனில் தேவனுடைய பரிசுத்தம் அவர்கள் கண்களை மறைத்திருந்தது. கவனியுங்கள் அவர்களுடைய மனச்சாட்சியில் பாவம் பிரவேசியாதபடி தேவன் பரிசுத்த திரையினால் அதை மறைத்திருந்தார். அதைக்குறித்து இன்னும் சில நிமிடங்கள் பேச சமயமிருந்தால் நலமாயிருக்கும். கவனியுங்கள், “ஆராதிக்கிறவன் ஒரு முறை சுத்திகரிக்கப்பட்டால், அவனுடைய மனசாட்சியில் பாவம் ஒருபோதும் இராது (எபிரெயர்). பாவம் அவனை விட்டு அகன்றுவிட்டது.” 61சகோதரன் நெவில் இன்று காலை இவ்வாறு கூறக் கேட்டேன். யாரோ அவரிடம் நான் ஏன் பரிசுத்த ஆவியைக் குறித்து பிரசங்கிப்பதில்லை என்று கேட்டிருப்பார்கள் என்று எண்ணுகிறேன். அதற்குப் பதில் இது தான். பரிசுத்த ஆவியென்பது உங்களுக்குள் காணப்படும் கிரியையாகும். அது ஜீவனாயிருக்கிறது. ஒரு வகையான மாமிசப் பிரகாரமான உணர்ச்சியல்ல. ஆனால் அது இந்த காலத்தின் ஒவ்வொரு வார்த்தையும் உயிர்ப்பிக்க உன்னுடைய இருதயத்தில் ஸ்தாபித்திருக்கும் அந்த தேவனுடைய வார்த்தையாகிய, நபராகிய, இயேசு கிறிஸ்துவாகும். சரி. பரிசுத்த ஆவியின் செயல்களைக் கவனியுங்கள். அது வெளிப்படையான அத்தாட்சியல்ல. தேவனுடைய வார்த்தையின்படி செய்தலாகும். 62கவனியுங்கள், பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய பரிசுத்த வார்த்தை. ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும் நிர்வாணமாக வைத்திருந்தார். அவர்கள் அதை அறியாமலிருந்தனர். எவ்வளவு அழகாயிருக்கின்றது - வார்த்தையின் ஜீவன், அந்த வித்து, அந்த வார்த்தை! தேவன் அவர்களிடம், “தோட்டத்தின் மத்தியில் ஒரு மரம் இருக்கின்றது. அந்த ஸ்திரீ அதைத் தொடவும் கூடாது. நீங்கள் அதைப் புசிக்கும் நாளில் சாகவே சாவீர்கள்,” என்றார். பரிசுத்தம் என்னும் திரையினால் அவர்கள் மறைக்கப்பட்டிருந்தனர். அதைக் குறித்து அவர்கள் அறியவேயில்லை. அதைத் தொடவும் அவர்கள் தைரியப்படவேயில்லை. அவர்கள் பரிசுத்தம் என்னும் திரையினால் மூடப்பட்டிருந்தனர். தேவனுடைய கூடாரத்தில் அவர்கள் பாதுகாப்பாயிருந்தனர். அவர்கள் உயிரோடிருந்தனர். அவர்களைச் சுற்றிலும் மரணம் காணப்படவில்லை. அல்லேலூயா! ஒருவரிலொருவர் அவர்கள் பூரண அன்பு கொண்டிருந்தனர். பூரண ஜீவனை அவர்கள் நிரந்தரமாய் பெற்றிருந்தனர். அவர்கள் பூரண அன்பு கொண்டவர்களாய், தேவனுடைய அன்பைக் குறித்துப் பூரண அறிவு உடையவராயிருந்தனர். தேவனுடைய வார்த்தை அவர்களிடமிருந்தது. அவர்கள் அதை கடைபிடித்தனர். தேவனுடைய ஏதேனில் அவர்கள் ஜீவனோடும் பாதுகாப்புடனும் இருந்தனர். அவர்களைச் சுற்றிலும் மரணம் காணப்படவில்லை. 63பின்னர் சத்தான் ஏவாளை அவனுடைய வேதசாஸ்திரமாகிய சுவிசேஷத்துக்கு, மனித அறிவை அடிப்படையாகக் கொண்ட சுவிசேஷம், மேலான கல்வி, உயர் நெறிமுறைகள், சிறந்த நாகரிகம், மேலான படிப்பு போன்றவைகளுக்கு செவி கொடுக்கும்படி செய்தான். அவன் கூறுவதை அவள் சற்று நின்று கேட்கும்படி அவன் செய்தபோது (அவனுடைய விளக்கத்தை; அதை நாம் புறக்கணிக்கக் கட்டளை பெற்றிருக்கின்றோம்) “பார், அதுதான் என் சபை, அது ஸ்தாபிக்கப்பட்டு அநேக ஆண்டுகளாயின. நம் நாட்டில் காணப்படும் மிகவும் பழமையான சபைகளில் இதுவும் ஒன்றாகும். நகராண்மைக் கழகத் தலைவரும் இங்கு தான் வருகிறார்.” என்னவாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. பாருங்கள்? தேவனுடைய வார்த்தைக்கு முரணாக அது காணப்பட்டால், நீயும் அதற்கு விரோதமாயிரு. அது உன் சத்துரு. தேவனுடைய வசனத்துக்கு விரோதமாயுள்ள எதுவும் உன் சத்துருவாகும். தேவ வசனத்தை ஆதரிக்கும் எவனும் உன் சகோதரன். அவன் உன் பக்கமாயிருக்கிறான். 64கவனியுங்கள், ஆண் பெண் உறவு என்னவென்பதை அறிய அவள் பரிசுத்தம் என்னும் திரையை நீக்கிவிட்டாள். இச்சை என்னவெல்லாம் செய்யக்கூடும் என்பதைச் சற்று சிந்தித்து பாருங்கள். கண்களின் மீது தேவன் வைத்திருந்த பரிசுத்த திரையை அவள் நீக்கிவிட்டு, அது என்னவென்பதைக் கண்டு கொள்ள அறிவைத் தேடினாள். எனவே, அது என்னவென்று பார்க்க அவள் திரையை இழுத்தாள். அவள் பிசாசுக்குச் செவிகொடுத்தாள். அவளை எந்நிலைக்கு அது கொண்டு சென்றது என்பதைக் கவனியுங்கள். அதன் பின்னர் ஒவ்வொரு காலத்திலும் அவர்கள் மனித அறிவின் சார்பில் செயல்பட்டு வந்தனர். சாத்தானின் இராஜ்யம் மனித அறிவை அடிப்படையாகக் கொண்டு இப்பொழுது நிறுவப்பட்டுள்ளது. அவன் விதைத்த விதை, முழு உலகையும் அவன் மரண ஏதேனாக்கிவிட்டான். 65இப்போது கவனியுங்கள், வெளிப்படுத்தல் 3-ல் கூறப்பட்டுள்ள லவோதிக்கேயா சபையின் காலத்தில் பாருங்கள். அதைச் சிந்தனை செய்யுங்கள். இப்போது, கவனியுங்கள். ஏவாள் சாத்தானின் அரசி. பாருங்கள், ஆதாம் ஏவாளை அறியுமுன்னரே, சர்ப்பமாகிய சாத்தான் அவளை அறிந்தான். பாருங்கள், அது உண்மை. அவன் அவளை வஞ்சித்தான். பாருங்கள். ஆதாம் அவளை அறியுமுன்னரே சர்ப்பமாகிய சாத்தான் அவள் கணவனானான். அவன் அவளை வஞ்சித்தான் என்று வேதம் உரைக்கின்றது. பாருங்கள்? அவள் அப்பொழுது நிர்வாணியென்று அறிந்தாள். பாருங்கள்? 66லவோதிக்கேயா சபையின் காலத்தை இப்பொழுது பாருங்கள். அங்கு ஏவாள் சாத்தானின் அரசியாக வீற்றிருக்கிறாள். உலக சம்பத்தினால் அவள் ஐசுவரியமுள்ளவளாய் இருக்கிறாள். அதே சமயம் அவள் குருடாகவும் மறுபடியும் நிர்வாணியுமாயிருந்து, ஏதேன் தோட்டத்திலிருந்தது போலவே இப்பொழுதும் அதை அறியாமலிருக்கிறாள். இப்பொழுது அவள் நிர்வாணியென்று அறியாததன் காரணம் தேவனுடைய பரிசுத்தத்திரை அவள் முகத்தின் மேல் இருப்பதனால் அல்ல. தேவனுடைய பரிசுத்தத் திரையை அவள் நீக்கிப்போட்டு, அதற்குப் பதிலாக அறிவென்னும் திரையை அவள் இச்சிப்பதற்கென உடுத்தியிருக்கிறாள். இச்சையென்னும் திரையை அவள் அணிந்து கொண்டு, அது பாவமென்பதை அறியாது குருடாயிருக்கிறாள். அவள் நிர்வாணியாக வீதியில் நடந்து செல்கிறாள். ஆனால் அவள் அதை அறியாமலிருக்கிறாள். அவள் வீதியில் நடமாடிக் கொண்டிருக்கும் வேசி. சிறிய கால் சட்டைஅணிந்த பெண்கள் தேவனுடைய பார்வையில் வேசிகளாயிருக்கின்றனர். ஆனால் அவர்கள் அதை அறியாமலிருக்கின்றனர். 67கவனியுங்கள், நாம் பெண்களை எடுத்துக் கொள்வோம். சபை எந்நிலையில் உள்ளது என்பதை நீங்கள் அறியவிரும்பினால், பெண்களின் நடத்தையைக் கவனித்து வாருங்கள். பெண் என்பவள் எப்பொழுதும் சபைக்கு அடையாளமாயிருக்கிறாள். சாத்தானின் ஏதேனில் பாவமும் அவிசுவாசமும் குடிகொண்டுள்ளன - மார்க்க சம்பந்தமான புரட்டல்; நெறி தவறிய இராஜ்யம். தேவனுடைய வசனத்தை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக, கல்வியறிவு பெற்ற மனிதரை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். உண்மையான சபையை ஏற்றுக் கொண்டு, அவைகளை ஒரு தலைவனின் கீழ் ஒன்று படுத்தமுயல்கின்றனர். 68இப்போது கவனியுங்கள், அவர்கள் களங்கமின்மையிலிருந்து அகன்றனர்... இதைக் கேட்கத் தவற வேண்டாம். சபையானது இச்சையென்னும் திரையை அணிந்து கொண்டிருக்கின்றது. அது என்ன செய்துள்ளது என்பதைக் கவனியுங்கள். அது அவளைக் களங்கமின்மையிலிருந்து அறிவுக்குக் கொண்டு சென்றுள்ளது. பாருங்கள்? பரிசுத்தம் என்னும் திரையை அவள் அணிந்து கொண்டிருந்தபோது, அவள் களங்கமற்றவளாய் இருந்தாள். ஆனால் இச்சை என்னும் திரையை அவள் அணியும் போது, அவள் அறிவு பெற்றவளாய் இருக்கிறாள். அது இனிமையாயிருக்கும் என்று அவளுக்குத் தெரியும். அது என்ன செய்யும் என்பதையும் அவள் அறிவாள். பாருங்கள்? அது ஒரு கனி, இச்சிக்கப்படத்தக்க விருட்சம், ஒருவன் புத்தியைத் தெளிவிப்பது. பாருங்கள். களங்கமின்மை என்னும் நிலையிலிருந்து அவள் அறிவு பெறுதல் என்னும் நிலைக்கும், பரிசுத்தத்திலிருந்து அசுத்தத்திற்கும் இச்சைக்கும், ஜீவனிலிருந்து மரணத்துக்கும் மாறினாள். அப்படிப்பட்ட இராஜ்யம் சாகவேண்டும்! அந்த இராஜ்யம் நிச்சயம் மரணம் எய்த வேண்டும்! பரலோகத்தின் தேவன் தாமே அதைப் பூலோகத்தில் இராதபடி நிர்மூலமாக்குவார். 69கவனியுங்கள், இந்த தாறுமாறாக்குதலில், ஆணிலிருந்து பெண்ணுக்கும் பெண்ணிலிருந்து ஆணுக்கும் இந்த மாறாட்டம் உண்டாவதைக் கவனியுங்கள். ஆயினும் அவர்கள் அதை அறியாமலிருக்கின்றனர். வீதிகளில் செல்லும் நவீன மக்களை நீங்கள் கவனிப்பீர்களானால், அவர்கள் சாத்தானின் ஏதேனை சார்ந்தவர் என்பது புலனாகும். 70இச்சை என்னும் சக்தியின் மூலம் ஏவாள் ஆதாமைப் பாவத்தில் வீழ்த்த சாத்தான் அவளை உபயோகப்படுத்தினான் என்பதை கவனிக்கவும். இன்றைக்கும் அதுவே சம்பவிக்கின்றது. கவனியுங்கள், பெண்கள் மயிர்கத்தரித்து, முகங்களில் வர்ணம் பூசி, கவர்ச்சியான ஆடையணிந்து காணப்படுகின்றனர். பாருங்கள்? அவள் அதைச் செய்கிறாள், இவை ஒவ்வொன்றும் தேவனுடைய வார்த்தைக்கு முரண்பட்டது என்பதை அவள் அறியாமலிருக்கிறாள். மயிர் கத்தரித்தல் அவளைக் கனவீனமான ஸ்திரீயாக ஒரு வேசியாக - மாற்றுகின்றது. சிறிய கால் சட்டை அணிதல் அவளை அவமதிப்புக்குள்ளாக்குகின்றது. அவள் பாலுணர்வைத் தூண்டும் ஆடைகளை அணிதல் அவளை ஒரு வேசியாக்குகிறது. ஆனால் அவள் அதை அறியாமலிருக்கிறாள். அவள் அறியாமலிருப்பது தேவனுடைய பரிசுத்தத்தைப் பெற்றிருப்பதனாலல்ல, சாத்தானின் இச்சை கொண்டிருப்பதனால். ஆதாம் அவளை இச்சிப்பதற்கு ஏவாள் காரணமாயிருந்தாள். 71தேவன் அவளுக்கு உடுத்தியிருந்த ஆடையை அவள் ஏதேனில் களைந்து போட்டு, வனாந்தரத்தில் அவளுடைய பிரயாணத்தைத் தொடங்கினாள். அவள் அவற்றை களைந்து போட்டாள். அப்பொழுது கர்த்தர் அவளைத் தோலினால் உடுத்தினார். ஆனால் அவளோ அதைச் சிறிது சிறிதாக ஒவ்வொரு முறையும் களைந்து வந்து, தற்பொழுது ஆதியிலிருந்த நிர்வாண நிலைக்கு வந்துவிட்டாள். இப்பொழுது அவள், அவள் அணிந்து கொண்டிருக்கும் உள் ஆடைகளை, அவளுடைய ஆதாம் அணியும்படி செய்கிறாள். ஒரு மனிதன் அந்த சிறுபிள்ளைத் தனமாய்க் காணப்படுகின்ற அந்த அரைக்கால் சட்டைகளைக் (Shorts) அணிந்து கொண்டு இங்கே வெளியே செல்வானானால், அவனுக்குள் ஆண்மைத்தனமே இல்லை என்றே நான் கருதுகிறேன். எனக்குத் தெரிந்தவரை அந்த மனிதன் தான் இருக்கிறவர்களிலே மிகவும் பெரிய கோழைத்தனமானவனாக பெண் தன்மை கொண்டவனாக இருப்பான். புரிகின்றதா? பாருங்கள், அவள் தன்னுடைய தாறுமாறாக்கப்பட்ட ஆதாம், தன்னுடைய கீழ்ப்பகுதிக்குரிய உள்ளாடைகளை அணிந்திருக்கிறவனாய், பாருங்கள்? தன்னைப் போலவே பெண்மைத் தன்மையுடையவனாக நடந்து கொள்ளச் செய்தாள். அவள் தன்னுடைய கீழ்ப்பகுதிக்குரிய உள்ளாடையைத் தவிர மற்ற தன்னுடைய எல்லா ஆடைகளையும் களைந்து போட்டால் தன்னால் என்ன சாதிக்க முடியும் என்பதை அவள் கண்டு கொண்டாள். அந்த கீழ்ப்பகுதிக்குரிய உள்ளாடை அரைக்கால் சட்டையாகும் (Shorts, ஷார்ட்ஸ்). ஆம் நிச்சயமாகவே, அது ஒரு பெண்ணின் கீழ்ப்பகுதிக்குரிய ஒரு உள்ளாடையாகும். ஆகவே இப்பொழுது அவளுடைய ஆதாம் அதை அணிந்துள்ளான். இது, தேவனுடைய மூல வார்த்தையின்படி, “ஒரு ஸ்திரீயானவள் புருஷனுடைய வஸ்திரத்தை உடுத்துக் கொள்வதகும், புருஷனானவன் ஒரு ஸ்திரீயினுடைய வஸ்திரத்தை உடுத்துக் கொள்வது அருவருப்பானதாகும்.” அது மூல வார்த்தையின்படி அருவருப்பாகும். அதைக் குறித்து சிந்தியுங்கள். 72இப்பொழுது அவளைப் போன்று அவன் மயிர் வளர்க்கிறான், அவன் மயிரை நன்றாக சீவிவிட்டு மயிரைச் சுருளச் செய்யும் சாதனங்களை உபயோகிக்கிறான். இக்காலத்து பையன்கள் மயிரை கீழ்புறம் இவ்விதம் சீவிக்கொண்டு, பெராக்ஸைட் (Peroxide) போன்ற ரசாயனங்கள் மூலம் மயிரின் நிறத்தை வெண்மையாக்கி, சுருள் சாதனங்களை உபயோகித்து மயிரைச் சுருளவிடுதல் போன்றவை என் வாழ்க்கையில் நான் கண்டிராத அருவருப்பான செயல்களில் சிலவாகும். பெண்மையைப் பெற்றவனே! பிரசங்க பீடத்தில் இவைகளைக் கூறுதல் பயங்கரமான செயல்தான். ஆனால் நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டில் தொடங்குகின்றது. நீ ஆணா அல்லது பெண்ணா என்பது உனக்கே தெரியவில்லை. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் இராணுவமும் இனிமேல் சிறிய குட்டை கால் சட்டைகள் அணிந்து கொள்ளப் போவதாகக் கேள்விப்பட்டேன். பாருங்கள்? என்னே ஒரு தாறுமாருகுதல்! அது உண்மை. அது பெண்ணின் ஆடையாகும்? ஆண் - பெண்ணின் சுருள் மயிரைத் தரித்துக் கொள்கிறான். 73அன்றொரு நாள் நான், ஹவர்ட் ஜான்சன்ஸில் நின்று கொண்டிருந்தேன்; இங்கே உள்ளதே அது அல்ல, அங்கே வெளியே செல்லும் சாலையில் இருப்பது. நான் அப்படியே ஆச்சரியப்பட்டு அமர்ந்துவிட்டேன். அங்கே ஒரு பையன் தன் வாயைத் திறந்தவனாய் வந்து கொண்டிருந்தான். அவன் இப்புறமாக தொங்கியிருந்த கறுத்த மயிரைக் கொண்டிருந்தான், அவன் அதை இந்த விதமாக சீவிவிட்டிருந்தான்; அதில் ஒரு மயிர் சுருளாக்கும் கருவியை உபயோகித்து தன் தலையைச் சுற்றி, தன் கண்களுக்கு மேல் மயிரை சுருட்டி விட்டிருந்தான்; கண்களை மேலே உயர்த்திப் பார்த்து சுற்றுமுற்றும் நடந்து கொண்டிருந்தான். அந்த விதமான ஒரு தாறுமாறுகுதலை நான் கண்டேனானால்! பாருங்கள், அது தவறென்பதை அவன் நம்பமாட்டான். அவன் ஆண் தானென்று அவன் ஒருக்கால் நிரூபிக்க முற்படலாம். ஆனால் அவனுடைய ஆவியோ பெண் தன்மையுடையதாக இருக்கிறது. அவன் எந்த இனத்தைச் சார்ந்தவன் என்பது அவனுக்கே தெரியாது. நான் கூறுவது உண்மை. என்னே ஒரு தாறுமாறு! சாத்தான் அதைத்தான் செய்து வருகிறான். அவன் தேசங்களை தாறுமாறாக்குகிறான். அவன் சபையை தாறுமாறாக்குகிறான். அவன் ஜனங்களை தாறுமாறாக்குகிறான். அவன் ஒரு வஞ்சகன் மூல சத்தியத்தை தாறுமாறாக்குகிறவன். தேவன் மனிதனை, ஒரு மனிதனாகவே உண்டாக்கினார். அவர் ஒரு பெண்ணை, பெண்ணாகவே உண்டாக்கினார். மேலும் அவர் அவர்களை வெவ்வேறு விதத்தில் உடையுடுத்தினார், அவர்கள் அந்த விதமாகவே இருந்து அந்த விதமாகவே நடந்து கொள்ள வேண்டுமென்றே நிர்ணயித்திருந்தார்; ஒன்று பெண்ணின் இயல்பான தன்மையையும் மற்றொன்று ஆண்களுக்குரிய ஆணியல்புகள் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதே. அவர் ஏதேன் தோட்டத்தில் ஆதாமை பிரித்தார், இதைச் செய்தார், ஏவாளை அவனிடமிருந்து வேறு பிரித்தார். 74ஆனால் ஆண் இனம் இன்று பெண்களைப் போல் மயிர் சுருளணிந்து; அவள் அவனைப் போன்று முடியை கத்தரித்துக் கொள்கிறாள், மற்றும் அவன் அவளுடைய முடியைப் போன்று வைத்துக் கொள்ளுகிறான். பாருங்கள். ஆண் உடுக்கும் வெளிப்புற ஆடைகளை பெண் அணிகிறாள். மற்றும் ஒரு ஆண், பெண்ணின் உள்ளாடைகளை அணிகிறான். இப்பொழுது, நான் கூறுவது பரிசுத்தகுலைச்சல் உண்டாக்குவது போல் காணப்படலாம், ஆனால் அவ்விதமாக இருக்க நான் விழையவில்லை. இது முற்றிலுமான சுவிசேஷ சத்தியமாகும். இதை நீ அறிந்து கொள்ளாவிடில், உன்னில் ஏதோ தவறுண்டு. ஒன்று நீ குருடனாயிருக்க வேண்டும், அல்லது நீ வீதிகளில் நடந்து சென்றிருக்கமாட்டாய். ஆணும் பெண்ணும் அவரவர் செய்வது சரியென்று எண்ணுகின்றனர். அவர்கள் தவறான பாதையில் எங்கோ சென்று கொண்டிருக்கின்றனர். “அதிக உஷ்ணமாயுள்ளது” என்று பெண்கள் கூறுகின்றனர். பழமையான சிவப்பு இந்தியர்களின் தோற்றத்தைக் கண்டு நீங்கள் அவமானப்பட வேண்டும். அதிக உஷ்ணம் உள்ள போது, சூரிய வெப்பத்தினின்று தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவர்கள் அதிக உடை அணிகின்றனர். அதன் காரணமாக அவர்களுக்கு அதிக வியர்ப்புண்டாகி அவர்கள் நடந்து செல்லும்போது காற்று கட்டுப்படுத்தல் (air conditioner) போன்று குளிராயிருக்கும். பாருங்கள்? அவர்கள் சூரிய வெப்பத்தையும் தாங்கிக் கொள்கின்றனர். 75ஆனால் உங்களால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. உங்களுக்கு கொப்பளங்களும், சூட்டுப்புண்களும் தோன்றிவிடும். பாருங்கள்? உயர்தர கல்வியும், நவீன விஞ்ஞானமும் உங்களை இந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளன. ஓ, என்னே, லவோதிக்கேயா சபையின் காலத்தில் அவள் நிர்வாணியாயிருந்தும், அதை அறியாமலிருக்கிறாள். ஏதேன் தோட்டத்திலும் அவள் நிர்வாணியாயிருந்தாள். இரு இராஜ்யங்களும் ஒரே தன்மையைப் பெற்றுள்ளன என்பதை அறியவும். பாவமும் மரணமும் ஒன்றில் காணப்படுகிறது. மற்றொன்றில் ஜீவனும் நீதியும் உண்டாயிருந்தது. ஏதேன் தோட்டத்தில் அவள் பரிசுத்தம் என்னும் திரையால் மறைக்கப்பட்டிருந்தாள், அவர்கள் இருவரும் நிர்வாணமாயிருந்தும் அதை அறியாமலிருந்தனர். ஏனெனில் அவர்கள் தேவ ஆவியால் மூடப்பட்டிருந்தனர். ஆனால் லவோதிக்கேயா சபையின் காலத்தில் அவர்கள் இச்சையென்னும் திரையினால் மூடப்பட்டிருக்கின்றனர். பாருங்கள்? ஆதாம் ஏவாளைப் பார்ப்பான். ஆயினும் அவள் நிர்வாணியென்பதை அவன் அறியவில்லை. தற்போதைய காலத்தில் இச்சையென்னும் திரையினால் அவள் மூடப்பட்டிருக்கும் காரணத்தால், அவள் இச்சையென்னும் திரையின் மறைவில் இருந்துகொண்டு, மனிதன் அவளை இச்சையோடு பார்க்கும்படி செய்கிறாள். நீ அதை நம்புவது கிடையாது. அவ்விதம் செய்து கொண்டே வருகிறாய், மனிதன் உன்னை இச்சையோடு பார்க்கிறான். உன்னில் கவர்ச்சி அதிகம் உண்டு என்பதை அவன் கண்டு கொண்டால், நீ அணிந்து கொள்ளும் சில ஆடைகளை இவன் இப்பொழுது அணிந்து கொள்கிறான். 76ஓ, என்னே, ஒரு தாறுமாறு. என்னே வஞ்சகமுள்ள காலம் அது. இவைகளை அறியாமலிருக்கின்றனர். ஒரு முழுமையான தாறுமாறான ஆவி மனிதனுக்குள் வாசமாயுள்ளது. இச்சையென்னும் சாத்தானின் திரையால் ஆணும் பெண்ணும் மூடப்பட்டிருக்கின்றனர். இந்த மகத்தான சமுதாயத்தில் சாத்தானின் ஆவி குடிகொண்டுள்ளது என்பதைப் பாருங்கள். அவர்கள் அதை அறியாமலிருக்கின்றனர். அவர்கள் ஒரு ஸ்தாபனம் அமைத்துள்ளனர். சிறிய குட்டை கால் சட்டை அணிந்த பெண்களும் ஆண்களும் ஸ்தாபனத்தின் அங்கத்தினராய் உள்ளனர். அந்த ஸ்தாபனத்தை, பிரக்கியாதி வாய்ந்த சகோதரிகளின் குழு (B.S.S. Big Sisters Society) என அழைக்கலாம். அதைத்தான் அவர்கள் சார்ந்தவர்கள். பெண்மையினைக் கொண்ட அக்குழுவில் அருவருப்பான கால் சட்டைகளை அணிந்துள்ளனர். 77ஆண்களே, இதை நீங்கள் ஆட்சேபிக்கலாம். ஆனால் அதுவே சத்தியமாகும். நீங்கள் தாறுமாறாக்கப்பட்டு. அதை அறியாமலிருக்கின்றீர்கள். ஆண் போன்று நீங்கள் நடந்து கொள்வதில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாத நிலைமை வெகு விரைவில் வந்துவிடும். இவர்கள் ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஒரு ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்கள். 'அடுத்த வீட்டு ஜான் சிறிய கால் சட்டை அணிந்து கொண்டிருக்கிறான். நான் ஏன் அணியக் கூடாது' என்றும், 'அடுத்த வீட்டு ஜான் அதை அணிவதால், நானும் அதை அணிய வேண்டுமென்று லூயெல்லா விரும்பினாள்' என்றும், 'சூசி ஜேன் இதை அணிந்துக் கொண்டிருப்பதால், மார்த்தா ஜேனும் சூசிலூவும் அதை அணியலாம்' என்றும் அவர்கள் கூறுகின்றனர். பாருங்கள்? பாருங்கள், இது ஒரு குழு. இது ஒரு ஸ்தாபனம். உங்கள் ஆவி அதனுடன் தொடர்பு கொண்டுள்ளது; ஆயினும் அதை நீங்கள் அறியாமலிருக்கின்றீர்கள். 78அப்படியானால் நீங்கள் குருடாக்கப்பட்டிருக்கின்றீர்கள் என்பதை நாங்கள் அறிகிறோம். சாத்தான் உங்களைத் தந்திரமாக நுழையச் செய்த அந்த ஸ்தாபனங்களின் தவறுகளைக் காணாதவாறு நீங்கள் குருடராக்கப்பட்டிருக்கின்றீர்கள். தேவனுடைய மூல வார்த்தையும், அவருடைய இராஜ்யமும், அவர் தமது பிள்ளைகளுக்கென வகுத்துள்ள திட்டமும் அங்கு தாறுமாறாக்கி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சாத்தான் ஆணையும் பெண்ணையும் தந்திரமாக இச்செயல்களுக்கு உட்படுத்தியிருப்பதை அவர்கள் அறியாமலிருக்கின்றனர். இனியும் அவன் ஒரு தேவனுடைய குமாரன் அல்ல! தன்னுடைய முகத்தில் நெற்றி அளவில் சதுரமாக வெட்டப்பட்டு முன் முடியை தொங்க விட்டுக் கொண்டு ஒரு குட்டைக் கால்சட்டையை அணிந்து கொண்டு, தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கிறவன்; ஒரு தேவ புத்திரனோ, சபையில் ஒரு உதவிக்கார டீக்கனோ, அல்லது பிரசங்க பீடத்தில் இருக்கும் மேய்ப்பராக இருந்தாலும் சரி. இல்லை, அவன் தேவனடைய குமாரன் அல்ல. அவன் தேவனுடைய சிந்திக்கும் வடிகட்டுதலினூடாக பிரவேசிக்கவேயில்லை. அவ்விதம் பிரவேசித்திருந்தால், அவன் ஒரு பெண்ணின் ஆடைகளை அணியவே மாட்டான். அவன் நிச்சமாக அதை செய்யவே மாட்டான். அவளும் ஒரு ஆணின் ஆடைகளை அணிந்து கொள்ளவே மாட்டாள். அது தேவனுடைய புத்திரனே அல்ல. அது சாத்தானுடைய குமாரன் மற்றும் சாத்தானுடைய குமாரத்தியாகும். சொல்வதற்கு கடினமான ஒன்று! 79சாத்தான் எல்லாவற்றையும் மாற்றி அமைத்து இவ்வுலகின் ஆதிக்கத்தை கைப்பற்றி, தன் சொந்த வாழ்க்கையை மனிதன் அமைத்துக் கொள்ள அவனுக்கு சுயாதீனம் அளிக்கப்பட்டிருந்த அந்த இராஜ்யத்தை தன்வசப்படுத்திக் கொண்டான். உங்கள் இருதயங்களின் விருப்பங்கள் என்னவென்பதை அது வெளிப்படுத்துகின்றது. பாருங்கள்? உங்கள் கிரியைகள் மிகுந்த சத்தமிட்டு பேசுகிறபடியால், உங்கள் சத்தத்தை அது அமிழ்த்திவிடுகிறது. ஒருவன் என்னிடம், 'நாமெல்லாரும் கிறிஸ்தவர்கள்; நாமெல்லாரும் சபையின் அங்கத்தினர்கள்' என்று கூறிவிட்டு அவன் அலுவலகத்தில் எல்லாவிடங்களிலும் நிர்வாணப் பெண்களின் படங்களைத் தொங்கவிட்டிருப்பான் என்றால், அவன் என்னிடம் கூறியவை அர்த்தமற்றவை. நீயாரென்பதை நான் அறிந்து கொள்வேன். அவ்வாறே நீயும் நான் யாரென்பதை அறிந்துகொள்வாய். சிறியதாக மயிர் வைத்திருக்கும் பெண் தன்னைக் கிறிஸ்தவள் என அழைத்துக் கொண்டாலும், அவளை நீங்கள் நன்கு அறிந்து கொள்வீர்கள். பாருங்கள்? ஆம் ஐயா. வர்ணம் தீட்டி, அழகுண்டாக்கும் சாதனங்களை உபயோகித்து, சிறிய குட்டை கால்சட்டை அணிந்துள்ள பெண் தன்னைக் கிறிஸ்தவள் என அழைத்துக் கொண்டாலும், அவள் நீயாரென்று நீங்கள் நன்கு அறிந்து கொள்வீர்கள். தேவனுடய வார்த்தை அதைக் காட்டிலும் மேலான காரியங்களைப் போதிக்கின்றது. இவைகளை செய்பவள் கிறிஸ்தவளாக இருக்க முடியாது என்று தேவ வசனம் உரைக்கின்றது. இவைகளை செய்பவள் கனவீனமுள்ளவள். கனவீனமுள்ள ஒன்றை தேவன் எவ்வாறு அவர் இராஜ்யத்தில் வைத்துக் கொள்ள முடியும்? முடியாது, ஐயா. முடியவே முடியாது. இல்லை, ஐயா. அவர்களுடைய இருதயங்களின் வாஞ்சைகளை அவர்களுடைய கிரியைகள் வெளிப்படுத்தும். 80புறாவைப் பருந்துடன் இரை தின்னச் செய்ய உங்களால் முடியவே முடியாது. புறாவுக்குப் பித்தநீர் இல்லை. ஆகவே, அது இறந்தவைகளின் மாமிசத்தைப் தின்ன முடியாது. சிறிய அளவு அதைத் தின்றாலும், அது சாகும். புறாவும் அதை அறிந்துள்ளது. பாருங்கள்? ஆனால் பருந்துக்குப் பித்தநீர் நிறைய இருப்பதால் அது விரும்பும் எல்லாவற்றையும் அதனால் தின்னமுடியும். இல்வுலகிலும் அதுபோன்றே உள்ளது. அவர்கள் நிர்வாணிகளாயும் குருடராயும் இருந்தும், அதை அறியாமலிருக்கின்றனர். 81ஸ்திரீயானவள் அறிவு பெற, ஆண் பெண் சேர்க்கையில் ஈடுபட இச்சித்ததின் விளைவாக சாத்தான் இவைகளைச் செய்தான். ஏவாள் தானாகவே அதைத் தெரிந்து கொண்டாள். கவனியுங்கள், ஏவாள் தான் ஆதாமை தவறுக்குள் வழி நடத்தினாள். ஆதாம் தன் உடைகளைக் களையும் முன்னரே ஏவாள் தன் உடைகளைக் களைந்துவிட்டாள். பாருங்கள்? எப்பொழுதும் ஒரு பெண்தான் காரணமாயிருக்கிறாள். அது அதே விதமாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது. அதுபோன்று, ஸ்தாபனங்கள் தாம் தேவபுத்திரனாய் இருக்க விரும்பும் மனிதனை வழிதவறச் செய்கின்றன. சபை என்னப்படும் ஸ்திரீ. பாருங்கள்? அவனை வழி தவறச் செய்வது வேதமல்ல, தேவனல்ல. வேதம் என்பது ஒரு மனிதன். ஆம், வார்த்தை மாமிசமானார். அவர் ஒரு மனிதனாக. இருந்தார். பாருங்கள் வேதாகமம் மனிதனாகும். சபை என்பது ஒரு ஸ்திரீ. பாருங்கள்? வேதம் அவனை வழி தவறச் செய்வதில்லை; சபைதான் அவனை வழிதவறச் செய்கின்றது. அந்த சபையுடன் தான் அவன் நிர்வாணியாய் சென்றான். வேதத்துடன் அல்ல. உண்மையாகவே இல்லை. அவன் நிர்வாண நிலையை வேதம் தான் எடுத்துரைக்கின்றது. ஆம், ஐயா! கவனியுங்கள், ஆண் பெண் சேர்க்கை என்னமாய் இருக்கும் என்று அறிந்து கொள்ள ஆவல் கொண்டவளாய், ஏவாள் இச்சைக்கு உட்பட்டாள். அந்த கனி நல்லதா இல்லையா என அறிந்து கொள்ள அவள் விரும்பினாள். அவள் அதில் ஈடுபட்டாள். 82ஆனால் தேவன் ஒரு நாளில் ஒரு மனிதனின் மூலம், இழந்து போன இவ்வுலகை திரும்பவும் மீட்டுக் கொள்வார். ஒரு ஸ்திரீயின் மூலம் அவன் உரிமை பறிபோயிற்று. ஆனால் ஒரு மனிதனின் மூலம், வார்த்தையாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் அது மீட்கப்படும். பிறகு என்ன? இதை முடிக்கையில் கவனியுங்கள். இங்கே சில கால முன்னர் நான் இதைக் கூறினேன். என்னிடம் இன்னும் நான்கு அல்லது ஐந்து பக்கங்கள் உள்ளன, ஆனால் நான்... வேத வசனங்களைக் குறித்தும் நான் மேற்கோள் காட்ட விரும்பும் மற்ற காரியங்களும்... ஆனால் கவனியுங்கள். இதைக் கூறி நாம் முடிப்போம். 83சில நாட்கள் முன்னர் ஏழு எக்காளங்கள், எக்காளப் பண்டிகை இவைகளைக் குறித்து நான் உங்களுக்குப் போதித்தேன். அப்பொழுது நான், “எட்டாம் நாள் பண்டிகை ஒன்றுண்டு” என்று கூறினேன். ஏழாம் நாள் என்பது கடைசி நாள். அதுதான், ஆயிர வருட அரசாட்சி. ஆனால் எட்டாம் நாள் பண்டிகை ஒன்றுண்டு. வாரத்தில் ஏழு நாட்கள் மாத்திரம் இருப்பதால் எட்டாம் நாள் என்பது மறுபடியும் வாரத்தின் முதலாம் நாளாகிவிடும். ஆகவே ஆயிரம் வருட அரசாட்சி வாரத்தின் முதலாம் நாளாகிவிடும். ஆகவே ஆயிரம் வருட அரசாட்சி முடிவடைந்த பின்னர் ஏதேன் மறுபடியுமாக ஸ்தாபிக்கப்படும். தேவனுடைய மகத்தான இராஜ்யம் அங்கு மறுபடியும் நிலைநாட்டப்படும். ஏனெனில் கெத்செமனே தோட்டத்தில் இயேசு பிசாசுடன் போர் செய்து வெற்றியடைந்து ஏதேனை திரும்பவும் பெற்றுக் கொண்டார். அதை ஆயத்தப்படுத்த அவர் பரலோகத்திற்கு சென்றிருக்கிறார்; அவர் திரும்ப வருவார். பரலோகத்தில் அவர் அதை ஆயத்தம் செய்கிறார். அவர் பூலோகத்திலிருந்தபோது, “உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக” என்றார். 84அவர் இங்கே பூமியின் மீதிருந்தபோது. அவர் யூதர்களிடம், “யூதர்களே, நீங்கள் தேவனிடத்தில் விசுவாசம் கொண்டிருக்கின்றீர்கள். என் பெயர் மோசமாயுள்ளதை நான் அறிந்திருக்கிறேன். என்னைக் குறித்து அவர்கள் மோசமாய் பேசுகின்றனர். தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாய் இருப்பது போல என்னிடத்திலும் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள்” என்றார். அவர் மாமிசத்தில் வெளிப்பட்ட தேவன். பாருங்கள்? மேலும் விசுவாசியுங்கள்... 85“என் பிதாவின் வீட்டில்... அதாவது என் பிதாவின் ஒழுங்கில், என் பிதாவின் திட்டத்தில், அநேக வாசஸ்தலங்கள் உண்டு. நான் உங்களுக்காக அந்த ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணப் போகிறேன்” என்றார். ஸ்தலத்தின் விஸ்தீரணத்தைப் பாருங்கள்: 1500 சதுர மைல்கள். “அது எங்கேயுள்ளது?” அதை ஆயத்தம் செய்ய அவர் சென்றிருக்கிறார். அவர் சிருஷ்டி கர்த்தர். அங்குள்ள பொன் எல்லாவற்றையும் அவர் சிருஷ்டிக்கிறார். அங்குள்ள வீதிகள் பளிங்கு போன்றவை. அவர் சிருஷ்டி கர்த்தர். அவர் ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறார். வெளிப்படுத்தல் 21ல், “யோவானாகிய நான் புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தை விட்டு இறங்கி வரக் கண்டேன்” என்று யோவான் கூறினான். சமுத்திரமும் இல்லாமற் போயிற்று. முந்தின வானமும் பூமியும் ஒழிந்து போயின. முந்தின வானம் என்பது என்ன? அதுதான் ஆயிர வருட அரசாட்சி. முந்தின பூமியென்பது என்ன? அதுதான் தற்போதைய பூமியாகும். அது புதிதாக்கப்படும். நோவா தான் பிரசங்கித்த நாட்களிலே பூமியை ஞானஸ்நானம் செய்தது போல கிறிஸ்து தாம் இரத்தம் சிந்தி பரிசுத்தமாக்கினது போல, முடிவில் பூமியானது அக்கினி ஞானஸ்நானம் பெற்று புதிதாக்கப்படும். அப்பொழுது பூமியிலுள்ள எல்லா விஷக் கிருமிகளும் வியாதிகளும், அசுத்தமும் நிர்மூலமாகும். 86பூமியானது வெடித்து, புதிய பூமியாக வெளிவரும். “பின் நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன். முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்து போயின; சமுத்திரம் இல்லாமற் போயிற்று. யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தை விட்டு இறங்கி வரக் கண்டேன்.” அங்கு தேவன் தம் உண்மையான தன்மைகளுடன் - அதாவது அவர் குமாரர் குமாரத்திகளுடன் - இருப்பார். அவர்களுடன் அவர் பரிசுத்தத்தில் ஐக்கியங் கொள்வார். அவர்களுடைய கண்கள் பாவத்திற்கு மறைக்கப்பட்டிருக்கும். அங்கு பாவம் என்பதே இராது அங்கிருக்க நாம் பிரயாசப்படுவோமாக! இந்நாட்களில் ஏமாந்து போக வேண்டாம். வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள். ஏனெனில் வேசிமார்க்கத்தாரும், இச்சையுள்ளவர்கள் யாவரும் விடப்படுவார்கள். “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபச்சாரஞ் செய்தாயிற்று.” வாசலின் வெளிப்புறத்தில் உள்ளவர் அனைவரும் நடத்தை கெட்ட பெண்களும், நடத்தை கெட்ட ஆண்களுமாயிருப்பர். மீட்கப்பட்டு ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புஸ்தகத்தில் பெயர் காணப்படுவர் மாத்திரமே வாசல் வழியாய் உட்பிரவேசிப்பார்கள். எனவே நண்பர்களே, அதற்கென்று பிராயசப்படுங்கள். கடைசி நாளில் ஏமாற்றம் அடையாதீர்கள். 87இது ஓர் மகத்தான நேரம். எல்லோரிடமும் பணமுண்டு, எல்லோரும் அதை வைத்துக் கொண்டு இதை செய்யலாம், அதை செய்யலாம் எல்லா வழிகளிலும் செல்வம் குவிந்து கொண்டிருக்கின்றது. பெரிய மோட்டார் வாகனங்கள், மற்றும் அநேக காரியங்கள். ஆனால் அவர்களில் ஒருவராது அந்நகரத்தில் காணப்படமாட்டனர். அங்கு ஒரு மோட்டார் வாகனமும், ஒரு ஆகாய விமானமும் இருக்காது. முற்றிலும் வேறுப்பட்ட நாகரீகம் அங்கு இருக்கும். அது ஒருவகை நாகரீகம்தான். ஆனால், அறிவையும் விஞ்ஞானத்தையும் அடிப்படையாகக் கொண்ட நாகரீகமாய் இராது. ஆனால் அது மாசற்றதால், ஜீவனுள்ள தேவன் பேரில் உள்ள விசுவாசத்தையும் அடிப்படையாகக் கொண்டதாயிருக்கும். அதனுள் பிரவேசிக்க நாம் பிரயாசப்படுவோமாக! என்றாவது ஒருநாளில் அந்நகரில் பிரவேசிக்க வேண்டுமென்பதே என் முழு நோக்கமாயுள்ளது. நாம் ஒவ்வொருவரும், “பரிசுத்தர் பவனியிலே, நான் ஓர் அங்கத்தினனாக இருக்க விரும்புகிறேன்” என்னும் பாட்டை அங்கு நாம் பாடிக் கொண்டிருப்பதை நீங்களும் என்னுடன் சேர்ந்து விசுவாசக் கண்களால் காணுங்கள். நாம் ஜெபம் செய்வோம். 88அன்புள்ள பரம பிதாவே, நாட்கள் முடிவடையப் போகும் காலம் நெருங்குவதை நாங்கள் காண்கிறோம். அதை குறித்த வாக்குத்தத்தமும் நிறைவேறும் காலம் சமீபமாயுள்ளதை காண்கிறோம். நாங்கள் தவறு எதுவும் செய்யாமலிருக்க, இதை எங்கள் இருதயங்களில் பதியச் செய்ய வேண்டுகிறோம். அன்புள்ள தேவனே, எங்கள் மனச்சாட்சியை சுத்தமாக வைத்தருளும், எங்கள் இருதயங்களையும் கண்களையும் உலகத்தின் காரியங்களின்று மறைத்துக் காத்தருளும். பிரக்கியாதி பெற்ற ஒருவனாக ஆக வேண்டுமென்னும் வீண் பெருமையும் எங்களில் இராதபடி காத்தருளும். அவர்கள் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும், இராஜாக்கள் சக்கிரவர்த்திகள், பலமுள்ளவர் அனைவரும் மற்றெல்லாமும் அழிய வேண்டும். அவர்கள் முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடைவதில்லை. “முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான். இவர்கள் மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை” என்று எழுதியிருக்கிறதே! ஓ, தேவனே, இரண்டாம் மரணமாகிய ஆவிக்குரிய மரணத்திற்கு, மீட்கப்பட்டவன் மேல் அதிகாரமில்லை. 89ஓ தேவனே, என்றாவது ஒருநாளில் நாங்கள் ஒருவரையொருவர் சந்தித்து ஒன்றாக எடுக்கப்படுவோம் என்பதை நினைக்கும்போது, “இரண்டு பேர் படுக்கையில் இருப்பார்கள். ஒருவனை எடுத்துக் கொள்வேன், மற்றவனைக் கைவிடுவேன். இரண்டு பேர் வயலில் இருப்பார்கள். ஒருவனை எடுத்துக் கொள்வேன். மற்றவனைக் கைவிடுவேன்” ஓ, தேவனே, மனிதர் எங்களைக் குறித்து என்ன நினைத்தாலும், என்ன சொன்னாலும், உம் பார்வையில் நாங்கள் பரிசுத்தராய் காணப்பட உதவி புரியும், எங்கள் உரையாடல்களும் பரிசுத்தமாயிருக்கட்டும். எங்கள் நடக்கை யாவும் பரிசுத்தமாயிருக்கட்டும். தேவனுடைய வார்த்தையினால் அது சாரமேற்றப்பட்டு, எவ்வித களங்கமும் எங்களில் காணப்படாமல் இருக்கட்டும். எங்களுடைய எல்லா தவறுகளிலும், இயேசு கிறிஸ்துவின் இரத்தம் எங்களுடைய தேவனுக்கு நடுவே நிற்க அருள் புரியும். இயேசுவின் இரத்தித்தின் வழியாய் எங்களை நோக்கிப் பாரும். எங்கள் சொந்த நீதியல்ல, நாங்கள் யாரென்பதல்ல, அல்லது நாங்கள் என்ன செய்கிறோம் என்பதல்ல, உமது தகுதியில் மாத்திரம் நாங்கள் சார்ந்திருக்க உதவி புரியும். 90இங்கு அமர்ந்து செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவராவது சிறு குழந்தை முதல் வயோதிபர்வரை கெட்டுப் போகாதபடி கிருபை செய்யும். அவர்களுடைய பரிசுத்த வாஞ்சை அனைத்தும் தேவனிலும் அவருடைய வார்த்தையின் பேரிலும் இருப்பதாக நீர் எந்த நேரத்தில் வருவீரென்றும், அல்லது நியாயத்தீர்ப்பில் பதிலுரைக்க எந்த நேரத்தில் எங்களை அழைப்பீரென்றும் எங்களுக்குத் தெரியாது. எந்நேரத்தில் நீர் அடுக்கிலிருந்து எங்கள் பெயர் எழுதப்பட்டுள்ள அட்டயை எடுத்து, நீ வீடு வந்து சேரவேண்டிய சமயம் வந்துவிட்டது, நீ புறப்பட்டு வரவேண்டும் என்று சொல்வீரோ, எங்களுக்குத் தெரியாது. தேவனே, நாங்கள் பரிசுத்தராயிருக்க உதவி புரியும். ஆண்டவரே, அதை தந்தருளும். கூடுமானால் கர்த்தரின் வருகைவரை நாங்கள் உயிர் வாழட்டும். எங்கள் ஆதிக்கத்தில் உள்ளவை யாவற்றையும் நாங்கள் அன்புடனும் புரிந்து கொள்ளுதலுடனும் நாங்கள் காணாமற்போன ஆடுகள் ஒவ்வொன்றையும் தேவன் இவ்வுலகில் தேடி கண்டுபிடித்து வருகிறார் என்னும் அறிவுடனும் செய்யக் கிருபை புரியும். அவர்களிடம் நாங்கள் அனுபவம் கொண்ட அன்பின் ஜெபத்தாலும் தேவ வசனத்தைக் கொண்டும் பேசி, காணாமற்போன கடைசி ஆட்டைக் கண்டுபிடிக்க உதவி புரியும். அப்பொழுது நாங்கள் இச்சையை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டுள்ள சாத்தானின் ஏதேனை விட்டு விட்டு எங்கள் வீடு திரும்புவோம், கர்த்தாவே, 91இந்த சாத்தானின் ஏதேன், 'அழகான பெண்கள்' என்று அழைக்கப்படுபவரால் நிறைந்திருக்கிறது. அவர்கள் “பையன்கள் முகத்தில் அழகு சாதனம் தடவிக் கொண்டும், அழகிய பெண்கள் சிறிய கால்சட்டை அணிந்தும் எங்களிடம் வரவும்” என்று விளம்பரம் செய்கின்றனர். எங்கள் வானொலிகளிலும் தொலைகாட்சிகளிலும் ஹாலிவுட்டைச் சேர்ந்த எல்லாவித அசுத்தமும் காணப்படுகின்றது. கவர்ச்சியான அசுத்தமான உடைகளை உடுத்திருக்கும் பெண்கள். மனிதரும் நிலைத்தவறிய பெண்களின் உடைகளை உடுத்தியுள்ளனர். பெண்களும் ஆண்களைப் போல் மயிர்கத்தரித்துக் கொள்கின்றனர். ஓ! தேவனே, எவ்வளவு பயங்கரமான நேரத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டு வருகிறோம்! வாரும் கர்த்தராகிய இயேசுவே, வாரும். ஆண்டவரே உம் இரத்தத்தினால் எங்களை சுத்திகரியும். எல்லா அசுத்தத்தையும் வஞ்சனையையும் எங்களை விட்டு அகற்றும். எந்நேரமும் நாங்கள் உம் சந்நிதானத்தில் உம் இரத்தித்தின் கீழ் தங்கியிருக்கட்டும். அதுவே எங்கள் வாஞ்சையும் உண்மையான வேண்டுகோளாய் இருக்கின்றது. 92அன்புள்ள தேவனே, சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்ட இந்த சாய்வு மேசையின் மேல் உறுமால்களும், அவைகளடங்கிய பார்சல்களும் உள்ளன. நோயுற்றோருக்கும், அவதிப்படுவோர்க்கும் அவை அனுப்பப்படவிருக்கின்றன. ஆண்டவரே, உமது பார்வைக்கு முன்னால் விசுவாச ஜெபம் எங்கள் இருதயங்களிலிருந்து புறப்படுவதாக. அசுத்தம் ஏதாகிலும் எங்களில் காணப்பட்டால், எங்களை இப்பொழுதே நியாயத்தீர்ப்புக்கு உட்படுத்தும்; உமது இரக்கங்களுக்காக நாங்கள் மன்றாடுகிறோம். நாங்கள் செய்யும் தவறு என்னவென்பதை வெளிப்படுத்தும். அப்பொழுது உம் இரத்தத்தினால் எங்களை சுத்திகரிக்க நாங்கள் வேண்டிக் கொள்வோம். பிதாவே, இங்குள்ள பிணியாளிகளை சுகப்படுத்தும். அவர்கள் எங்கு சென்றாலும், அது அவ்வாறே நிகழட்டும். 93உம்மை மாத்திரம் சேவிக்க வேண்டுமென்னும் தீர்மானத்தை எங்களுக்கு அளிப்பீராக. ரஸ்தாக்களில் பயணம் செய்து வீடு திரும்பவிருக்கும் இம்மக்களுக்குப் பாதுகாப்பு அளியும். மக்களுக்கு சுகத்தை அளித்ததற்காக நன்றி செலுத்துகிறேன். மற்றும் சகோதரி ஷெப்பர்ட், சைகிள் ஓட்டும் போது காயமுற்ற சகோதரன் ஷெப்பர்ட் அவர்களின் சிறிய பையன், இவர்களுக்காகவும் வேண்டிக் கொள்கிறேன். தீங்கு ஏதும் அவர்களை அணுகாமலிருக்கக் கெஞ்சுகிறேன். சைக்கிளில் சென்ற போது காயமுற்ற அந்த சிறு பையன் சுகமடைய வேண்டிக் கொள்கிறேன். நாங்கள் வேண்டிக் கொண்டவர்களுக்கு சுகமளித்ததற்காக நன்றி செலுத்துகிறோம். நாங்கள் கேட்டுக் கொண்டதைப் பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசிக்கின்றோம். ஏனெனில் வாக்குத்தத்தம் செய்தவரின் பேரில் எங்களுக்குத் திடநம்பிக்கையுண்டு. ஆண்டவரே, உம் கிருபையை எங்களுக்களித்து, எங்கள் பாவங்களை மன்னியும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 94அவரை நேசிக்கின்றீர்களா? (சபையார் 'ஆமென்' என்கின்றனர் - ஆசி) அவரை விசுவாசிக்கின்றீர்களா? ஆமென். சாத்தானின் இராஜ்யம் உங்களுக்கு வெறுப்பும் சோர்வும் அளிக்கின்றதா? ஆமென், ஆயிரம் வருட அரசாட்சியை? அவருடைய ஏதேனை - நாம் நெருங்கி கொண்டிருக்கின்றோம் என்பதை நம்புகின்றீர்களா? ஆமென். அது இப்பொழுதே உருவாகிக் கொண்டிருக்கின்றது என்பதை விசுவாசிக்கின்றீர்களா? ஆமென். இக்காலத்தில் எல்லாமே மனித அறிவை அடிப்படையாகக் கொண்டுள்ளது; அவர்கள் ஒன்றை நம்ப வேண்டுமானால் அது விஞ்ஞான ரீதியாய் நீருபிக்கப்பட வேண்டிய காலமாய் இது உள்ளது. நீங்கள் தேவனை விஞ்ஞான ரீதியாய் நீரூபிக்க முடியாது. விசுவாசத்தில் மூலமாகவே அவரை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும், “ஏனெனில் தேவனிடத்தில் வருகிறவன் அவர் உண்டென்றும் அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.” ஓ, தேவனே! பாவத்தினின்று என்னை சுத்திகரியும், இயேசு கிறிஸ்துவின் இரத்தமேயன்றி வேறொன்றையும் அறிய விரும்பேன். இயேசுகிறிஸ்துவைத் தவிர வேறெதையும் நான் அறியேன். பவுல் அன்று கூறியது போன்று நானும், “நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்ரையும் அறியேன்” என்று இன்றிரவு கூற விரும்புகிறேன். 95இந்த வேதம் தேவனுடைய பரிபூரணமான, கலப்படமற்ற வார்த்தை என்று இருதய பூர்வமாய் விசுவாசிக்கின்றேன் என்பதை மாத்திரம் உங்களிடம் கூறுவதற்கு நான் அறிந்திருக்கிறேன். இவ்வார்த்தையின் மூலமாகவே நான் ஜீவிக்கிறேன். இவ்வார்த்தையின் காரணமாக நான் உறுதியாய் நிற்கிறேன். எனக்கு ஒருக்கால் பத்தாயிரம் வாழ்க்கை இருப்பின், அவையாவையும் இவ்வார்த்தைக்குச் சமர்ப்பிக்க விரும்புகிறேன். ஏனெனில் இது இயேசு கிறிஸ்துவின் வார்த்தையாகும். அது தவறென்று எவ்வளவாக அவர்கள் நிரூபிக்க முனைந்தாலும், அது நம்பத்தக்கதல்லவென்று விஞ்ஞானம் கூறினாலும் எனக்குக் கவலையில்லை. என்னைப் பொருத்த வரையில் இவ்வுலகில் நான் விசுவாசிக்கக் கூடிய ஒன்றே ஒன்று இந்த தேவனுடைய வார்த்தையாம். பாருங்கள்? அவர் என்னுடையவர். நான் அவரை நேசிக்கின்றேன். நீங்களும் அவரை நேசிக்கிறீர்கள் அல்லவா? (சபையார் “ஆமென்” என்கின்றனர் - ஆசி). 96உங்கள் இருதயத்தில் பாவம் ஏதாவது குடிகொண்டிருந்தால், உங்கள் இருதயத்தில் தவறு காணப்பட்டால், அல்லது வேறெதாவது இருந்தால், இப்போது ஜெபியுங்கள், தேவனிடத்தில் மன்னிப்பு கோருங்கள். எனக்காக நீங்கள் ஜெபியுங்கள், நானும் உங்களுக்காக ஜெபிப்பேன். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக! என்பதே வேண்டுகோளாயிருக்கிறது. நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை! தேவன் உங்களோடிருப்பாராக நாம் மறுபடியும் சந்திக்கும் வரை நீங்கள் ஒருவரிலொருவர் அன்பு கூருகின்றீர்களா? (சபையார் “ஆமென்” என்கின்றனர் - ஆசி) “சிறு பிள்ளைகளே, ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்” என்று யோவான் போதித்தான். ஒருவரிலோருவர் அன்பு கூருங்கள். ஏனெனில் அன்பு திரளான பாவங்களை மூடும், நாம் ஒருவரோடொருவர் கைகுலுக்குவோம், தேவன் உங்களோடிருப்பரராக நாம் மறுபடியும் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை! ஒருவரிலொருவர் பட்சாமாயிருங்கள். எல்லோரிடமும் பட்சமாயிருங்கள். உங்கள் அயலாரை சரிவர நடத்துங்கள். இயேசுவின் வருகை வரைக்கும் மாசற்றவராய் இருங்கள். நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை! தேவன் உங்களோடிருப்பாராக நாம் மறுபடியும் சந்திக்கும் வரை. 97அவரை நேசிக்கின்றீர்களா? (சபையார் “ஆமென்” என்கின்றனர் - ஆசி) அதுவே என் விண்ணப்பம். எனக்காக நீங்கள் ஜெபியுங்கள். நானும் உங்களுக்காக ஜெபிப்பேன். நான் டூஸானுக்கு திரும்பிச் செல்ல வேண்டும். கர்த்தர் உங்கள் எல்லாரையும் ஆசீர்வதிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன். அங்கிருந்து நான் கனடாவுக்குச் சென்று வருவேன். பாருங்கள்? சகோ. டோனி அங்குள்ளார்; மகத்தான செயல் அங்கு நிகழ்ந்துள்ளது. ரோமாபுரியிலுள்ள வாடிகன் பட்டிணத்தில் ஒரு எழுப்புதல் கூட்டம் நடத்த எத்தனித்துள்ளனர். நான் ரோமாபுரிக்குச் சென்று எழுப்புதல் கூட்டம் ஒன்றை நடத்த வேண்டுமென்று அவர்கள் விரும்புகின்றனர். சகோ. டோனி இப்பொழுது தான் திரும்பி வந்தார். ஜனங்கள் ஒருமித்து, பல்லாயிரம் பேர் அமரக் கூடிய ஓர் பெரிய அரங்கத்தை எடுத்துள்ளனர். எழுப்புதல் கூட்டம் நடத்த நான் அங்கு வரவேண்டுமென்று விரும்புகின்றனர். ஊழியத்தில் தேவனுடைய மகிமையைக் காண அவர்கள் ஆவல் கொண்டுள்ளனர். எனக்குத் தெரியவில்லை. இதற்காக நான் ஜெபித்து, தேவன் என்ன சொல்வார் என்பதை நான் அறிய வேண்டும். ஓ, என்னே. ஜெபம் செய்ய ஞாபகமிருக்கட்டும். நாமெல்லாரும் ஒருமித்து ஜெபிப்போம். நம்முடைய ஆசீர்வதிக்கப்பட்ட இரட்சகரின் வருகைக்காக, நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம், இதோ, அத்தி இலைகள் இப்பொழுது பச்சை நிறமாகிறதே; அவருடைய இராஜ்யத்தின் சவிசேஷமானது, ஒவ்வொரு தேசத்திற்கும் சென்றது; நாம் முடிவிலிருப்பதை காணமுடிகிறது. அது சரிதானே? (சபையார் “ஆமென்” என்கின்றனர் - ஆசி)) அவருடைய ஆசீர்வதிக்கப்பட்ட தோன்றுதலின் செய்தியை, நாம் மகிழ்ச்சியுடன் முன்னறிவிப்போம். சீக்கிரத்தில் எல்லோருக்கும் அறிவிக்கும்படி, அவர் மகிமையிலிருந்து வரப் போகின்றார்; எழுந்திருங்கள், கர்த்தருடைய பரிசுத்தவான்களே, முடிவு நெருங்குகையில் ஏன் உறங்குகிறீர்கள், அந்த கடைசி அழைப்புக்காக ஆயத்தமாவோம். 98நினைவில் கொள்ளுங்கள். வரவிருக்கின்ற நாட்களில், அவள் மேற்கு திரும்பி மறுபடியுமாக சவாரி செய்வாள். நிச்சயமாக அவள் செய்வாள். அது சரி. அதுவரை; இயேசுவின் நாமத்தை உம்மோடு கொண்டு செல், வருத்தமும் துன்பமும் மிக்க பிள்ளையே; சந்தோஷம் சமாதானம் அது உனக்களிக்கும், செல்லுமிடமெல்லாம் அதைக் கொண்டுச் செல். விலையுயர்ந்த நாமம் (விலையுயர்ந்த நாமம்), ஓ என்ன இனிமை! இப்புவியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமாமே; விலையுயர்ந்த நாமம் ஓ என்ன இனிமை! (ஓ, என்ன இனிமை) இப்புவியின் நம்பிக்கையும் பரலோகத்தின் சந்தோஷமாமே; இயேசுவின் நாமத்தில் முழங்காலை முடக்கி, அவருடைய பாதங்களில் சாஷ்டாங்கமாய் விழுவோம். பரலோகத்தில் ராஜாதிராஜாவாய் அவருக்கு முடி சூடுவோம். நமது யாத்திரை முடிந்த பிறகு. விலையுயர்ந்த நாமம், ஓ என்ன இனிமை! இப்புவியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமாமே; விலையுயர்ந்த நாமம், ஓ என்ன இனிமை! இப்புவியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமாமே; 99இப்பொழுது, இந்த கடைசி பல்லவி, நம்முடைய தாழ்த்தப்பட்ட இருதயங்களோடு இப்பொழுது இதை பாடுவோமாக. இயேசுவின் நாமத்தை உம்மோடு கொண்டு செல், ஒவ்வொரு கண்ணியிலும் காக்கும் கேடயமாக; சோதனை உன்னைச் சூழும் வேளையில், (சாத்தானின் ராஜ்யத்தைச் சார்ந்த இந்த காரியங்கள், பாருங்கள், பாருங்கள்) ஜெபத்தோடு அப்பரிசுத்த நாமத்தை சுவாசி அவ்வளவு தான், அப்படியே நடந்து செல்லுங்கள். அது கிரியை செய்கிறது. நான் அதை செய்து பார்த்துள்ளேன். இப்பொழுது அதை விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள், ஏனெனில் அது கிரியை செய்யும். அவருடைய பரிசுத்த நாமத்தை சுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள். இயேசுவின் நாமத்தை உம்மோடு கொண்டு செல், ஒவ்வொரு கண்ணியிலும் காக்கும் கேடயமாக; சோதனை உன்னை சூழும் வேளையில், (அப்படியானால் அப்பொழுது நீ என்ன செய்வாய்?) ஜெபத்தோடு அப்பரிசுத்த நாமத்தை சுவாசி. (அந்த திரை உன் முகத்தின் மீது அப்பொழுது வரும்) விலையுர்ந்த நாமம் (விலையுயர்ந்த நாமம்) ஓ என்ன இனிமை! இப்புவியின் நம்பிக்கையும் பரலோகத்தின் சந்தோஷமாமே; விலையுயர்ந்த நாமம், ஓ என்ன இனிமை! இப்புவியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமாமே; சகோதரன் பீலரை இங்கே பிரசங்க மேடையின் மீது வரும்படி நான் அழைக்கையில் இப்பொழுது நமது தலைகளை தாழ்த்துவோமாக. (சகோதரன் பிரன்ஹாம் இயேசுவின் நாமத்தை உம்மோடு கொண்டு செல் என்று வாய் மூடி இசைக்கிறார் - ஆசி) 100இப்பொழுது நமது தலைகளும், நமது இருதயங்களும் தாழ்த்தியிருக்கையில் நம்மோடு இருப்பவர்களில் ஒருவராகிய சகோதரன் பீலர், சகோதரன் ஏர்ணஸ்ட் பீலர், அருமையான கிறிஸ்தவ சகோதரன், உத்தமமான மனிதன். இன்றிரவு இக்கூட்டத்தை ஜெபம் செய்து முடித்து வைப்பாரா என்று நான் அவரை கேட்கப் போகிறேன். சகோதரன் பீலர், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.